சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.

வரும், 26ல், ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க., சார்பில், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சிவா, அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த செல்வராஜ், முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த, என்.ஆர்.இளங்கோ ஆகிய மூவரும், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். ராஜ்யசபாவில், ஏற்கனவே முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளார். அதே சமுதாயத்தைச் சேர்ந்த சிவாவை, வேட்பாளராக அறிவித்தது, அக்கட்சியில் எதிர்ப்பை கிளப்பிஉள்ளது.


அதேபோல, ஏற்கனவே முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த, ஆர்.எஸ்.பாரதி, சண்முகம் ஆகிய, இரு எம்.பி.,க்கள் உள்ள நிலையில், அதே சமுதாயத்தைச் சேர்ந்த, என்.ஆர்.இளங்கோவுக்கு, எம்.பி., பதவி தரப்படுவதும், கடும் விமர்சனத்தை ஏற்படுத்திஉள்ளது.


தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், என்.ஆர்.இளங்கோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற பேச்சும், அக்கட்சி வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பி இருக்கிறது.


சரத்குமார்:இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: காமராஜரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த, நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த, எம்.சி.பாலனுக்கு, 1971ல், ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது. அவருக்கு பின், நடிகர் சரத்குமாருக்கு வாய்ப்பு தரப்பட்டது. தற்போது, நாடார் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறை, அக்கட்சியில் உள்ளது.


அதேபோல, வன்னியர் சமுதாயத்தில், செல்வகணபதிக்கு பின், யாருக்கும் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. முத்தரையர் சமுதாயத்தினருக்கும் முக்கியத்துவம் இல்லை.


குடியுரிமை சட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


மேலும், தேவேந்திர குல வேளாளர், நாயுடு போன்ற சமுதாயத்தினருக்கும், வாய்ப்பு தரப்படவில்லை. இதனால், கட்சியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் கூறின.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு