முக கவசம் அணிந்து பெண் வழக்கறிஞர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்துவிட பட திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
கோவிட்19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
விலங்கில் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது.
ஊஹான் மாகாணத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிக்கு சென்றவர்கள் மூலமாகவும் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் பரவும்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது.
இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே,
இருமல், தும்மல், சளி, வறண்ட தொண்டை, காய்ச்சல் போன்றவை இரு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக மருத்துவரை அனுகவும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்கள் மூக்கு - வாயை மறைக்கும் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே செல்வது நல்லது.
சத்தான உணவு, பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
எப்போதும் கை கழுவுதல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். இருமல், தும்மலின் போது மூக்கு, வாயை துணியால் மூடிக்கொள்வதும் அவசியம்,
சுகாதாரத்தினை பேணி பாதுகாக்கும் வகையில் கை கழுவுதலை வலியுறுத்தியும், நண்பர்களிடையே கைக் கூப்பி வணக்கம் சொல்லுவோம்.
ஒவ்வொரும் தனக்கும் தன், அன்புக்குரியவர்களையும், பெற்றோரையும், தாத்தா பாட்டிகளையும் உற்றார், உறவினர்கள், சுற்றத்தார் ,நண்பர்கள் அனைவரையும் பாதுகாக்க
சன நெரிசலான இடங்களுக்கு வெளியே செல்ல வேண்டாம்.
பொது இடங்களில் கூட்டமாக ஒன்றுகூட வேண்டாம்.
இந்த நேரத்தில் வீட்டில் அதிக நேரம் இருங்கள்
சுகாதார துறை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு நபரிடமிருந்தும் முடிந்தவரை ஒரு மீட்டர் தொலைவில் நடப்போம்
தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு
மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவதை பின்பற்றுவோம் என்ன விளக்கினார்கள் கை கழுவ கூடிய விதங்களை எடுத்துரைத்தும் முக கவசங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் செல்லம் தமிழரசன், செயலாளர் ஜெயந்தி ராணி , பொருளாளர் ராஜலட்சுமி, வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், நீமாவதி, கீதாலட்சுமி, விஜயலட்சுமி உட்பட மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள்
நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.