கொரோனாவிலிருந்து தப்பிக்க கைகளை மட்டுமல்ல செல்போனையும் சுத்தப்படுத்த வேண்டும்!

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மக்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து அறுவுறுத்தப்பட்டு வருகிறது.


இதில், மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது போன்றவற்றை நாம் செய்வோம். ஆனால், மொபைல் போன், லேப்டாப் மற்றும் அனைத்து தனிப்பட்ட கேஜெட்களையும் கவனமாகப் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.


மொபைல் போன்களால் பாக்டீரியா,  வைரஸ்கள் பரவுவதற்கான  சாத்தியக்கூறுகள் அதிகம் என உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி அறிக்கைகள் எச்சரித்துள்ளன. இந்நிலையில், மொபைல் போன்  அல்லது மடிக்கணினியில் பாக்டீரியா இருந்தால், கைகளைக் கழுவினாலும்கூட தொற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் கேஜெட்களை சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியம்.


மொபையில் இருந்து பேச ஹெட்போன்களை பயன்படுத்தலாம். இது தொலைபேசியிலிருந்து, முகத்திற்கு வைரஸ் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.


பேன்ட் பாக்கெட்டில் ஒரே பாக்கெட்டில் போனையும், அதனுடன் கைக்குட்டையையும் வைக்க வேண்டாம்.


அலுவலகங்களில் பொது கணினிகளைப் பயன்படுத்தும்போது கிருமி நாசினிகளைப் பயன்படுத்துங்கள்.


போனை சுத்தப்படுத்த செல்போன் நிறுவனங்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளன.


அதன்படி, குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் அடிப்படையிலான wipes பயன்படுத்தலாம்.


உங்கள் ஸ்மார்ட்போன் வாட்டர் ப்ரூப்  என்றால், அதை சோப் மற்றும் தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தலாம். ஆனால், போனை தண்ணீருக்குள் முழுமையாக நனைப்பது, கிருமி நாசினிக்குள் விடுவது கூடாது. இது செல்போனை பாதிக்கக்கூடும்.


ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய கிருமி நாசினிகள், அல்கஹால் போன்ற க்ளீனர்களை நேரடியாக spray செய்து பயன்படுத்த வேண்டாம்.


Micro fiber cleaning cloth-ஐப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.


Clorox Disinfecting Wipes-ஐப் பயன்படுத்தி சுத்தம் செய்ய ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.


பேப்பர் டவலில் கிருமி நாசினியைப் போட்டு சுத்தம் செய்யலாம் என At&t நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.


சுத்தம் செய்வதற்கு முன் உங்கள் ஸ்மார்ட்போனை அணைக்க வேண்டும்.


மடிக்கணினியில் கிருமி நாசினிகள் வைத்து ஒவ்வொரு மூலையையும் tissue paper பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். அந்த சமயத்தில் மடிக்கணினியை அணைக்க வேண்டும்.


அதேபோல், Headphonesஐ சுத்தம் செய்ய மறக்காதீர்கள். அதை சுத்தம் செய்ய நீங்கள் எந்தக் கிருமி நாசினிகளையும் பயன்படுத்தலாம்.


கேஜெட்டை சுத்தம் செய்ய எந்த வகையான cleaner-ஐயும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், இது கேஜெட்டின் அசல் நிறத்தை கெடுக்கக்கூடும்.


உங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியை சுத்தம் செய்தபின், கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.


உங்கள் தனிப்பட்ட கேஜெட்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தவறாமல் சுத்தம் செய்ய பழக வேண்டும்.


வேறொருவரின் தொலைபேசி அல்லது மடிக்கணினியைத் தொடாமல் இருக்கலாம். அதேபோல், உங்கள் கேஜெட்டையும் மற்றவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)