ஹிந்தியை தமிழகத்தில் கொண்டு வரும் விதமாக இந்த ஹிந்தியில் பெயர் கொண்ட இந்த ஆப்பை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது

சென்னை மாநகரத்தில் நாளொன்றுக்கு சுமார் 3,300 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இருப்பினும் சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலின் காரணமாகப் பேருந்து எங்கே வருகிறது என்று தெரியாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் பேருந்துக்காகக் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.


குறிப்பாக, வெளியூரிலிருந்து வரும் பயணிகள் அந்த வழித்தடத்தில் எந்த பேருந்து வரும் என்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் மக்களின் இந்த சிரமங்களை போக்குவதற்காக சலோ (Chalo) என்ற ஆப் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.


என்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமில்லாமல், இதில் ஆன்லைன் மோட் மற்றும் ஆப்லைன் மோட் கூட இருக்கிறதாம். கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அந்த செயலியில் பேருந்து எண்ணை தேடினால் அந்த பஸ் எங்கே வருகிறது, அடுத்த பஸ்ஸின் இடைவெளி நேரம், எந்த வழியாக வருகிறது


இது எப்படி சாத்தியம் என்று உங்களுக்குக் கேள்வி எழுந்திருக்கும். சென்னையில் இயங்கும் பெரும்பாலான பேருந்துகளில் ஜி.பி.எஸ் வசதி இருப்பதால் அதன் மூலம் இந்த செயலி இயங்கும். தற்போது சென்னையில் மட்டுமே அமல்படுத்தப் பட்டுள்ள இந்த செயலி, மக்களின் வரவேற்பைப் பொறுத்து மற்ற இடங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹிந்தி வார்த்தையான 'சலோ' என்பதற்கு இங்கே வா என்று தமிழில் பொருள். ஹிந்தி திணிப்பு, ஹிந்தி பாடம் வேண்டாம் என்றெல்லாம் தமிழகத்தில் ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருக்கையில், ஹிந்தியை தமிழகத்தில் கொண்டு வரும் விதமாக இந்த ஹிந்தியில் பெயர் கொண்ட இந்த ஆப்பை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)