குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்.

 


குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


முதலமைச்சர் சந்திரசேகரராவ் கொண்டு வந்த அந்த தீர்மானத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத் திருத்தத்தில் இடம்பெற்றுள்ள எந்தவொரு மதத்திற்கும் அல்லது எந்தவொரு வெளிநாட்டிற்கும் எதிராக அனைத்து பிரிவுகளையும் நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் மாநில மக்களை என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி போன்ற நடைமுறையிலிருந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


குடியுரிமைத்திருத்தச் சட்டம் மற்றும் தேதிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய 7வது மாநிலம் தெலங்கானா என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு