பார்க் செய்யப்பட்ட மோட்டார் பைக்கில் குடிபுகுந்த நல்ல பாம்பு - ஊரடங்குக்குப் பின் மக்களே.. உஷார்...

கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் காரணத்தால் 21 நாட்களுக்கு இந்தியாவில் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதனால் மக்கள் அவசியமின்றி பொதுவெளியில் நடமாடக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து மக்கள் வெளியே வருவதை தவிர்த்துள்ளனர்.


இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.


மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் கடற்கரைகளில் நண்டுகள், ஆமைகள் கரைகளில் ஒதுங்குவது போல, நகர்ப்புறங்களிலும் பல உயிரினங்கள் சுதந்திரமாக நடமாடுகின்றன.


அந்தவகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஊரடங்கு காரணமாக வீட்டின் முன் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் கண்ணாடி உள்ள பகுதியில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.


இதனைக் கண்டதும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை பணியாளர், மோட்டர் பைக்கில் இருந்த பாம்பை வெளியேற்றினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.


இதனைக்கண்ட இணையவாசிகள், ஊரடங்கின்போது வாகனங்களை உபயோகிக்கவில்லை என்றாலும், அதனை அவ்வப்போது சுத்தப்படுத்தி வைத்தால் இதுபோன்ற உயிரினங்கள் புகுவதைத் தவிர்க்க முடியும் என கருத்து தெரிவிக்கின்றனர்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image