மனிதனைக் காப்பாற்ற கடவுள் வரமாட்டார்: நடிகர் விஜய் சேதுபதி

மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள் என மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.


விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.


இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, 


"மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள். கரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.


இது மாதிரியான தருணத்தில் உறவினர்களே நம்மைத் தொடுவதற்கு யோசிக்கும்போது நம்மைத் தொட்டு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.