மருத்துவமனை வசதிகள் இல்லாமல் தென் கொரியா கடும் நெருக்கடியை சமாளித்தது எப்படி...

கொரோனா தாக்கிய இருண்ட காலங்களில் தென் கொரியாவுக்கு போதிய அளவுக்கு மருத்துவர்களோ, செவிலியர்களோ மருத்துவமனை வசதிகளோ இல்லாத சூழ்நிலையில் அந்நாடு நிலைமையை சமாளித்து வருகிறது.


மக்கள் கொத்தாக செத்து வீழும் ஒரு இக்கட்டான சூழலில் மருத்துவமனை படுக்கைகள் கொரோனாவுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டன. அந்நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் உதவியை நாடிய அரசு, நோயாளிகளை நான்கு பிரிவுகளாக பிரித்து மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.


இளம் வயதினர், உடல் ஆரோக்கியம் மிக்கவர்களுக்கு சாம்சங், லைப் இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்கள் அளித்த தங்குமிடங்களில் வைபை, தொலைக்காட்சி வசதிகளுடன் தங்க வைத்தது. அந்நாட்டில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் 104 பேர் உயிரிழந்தனர்.


தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் தென் கொரியா குறைந்த வசதிகளையும் வைத்து எவ்வாறு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது என்பதற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது