பொதுச் சேவையை பாராட்டி தமிழ்மகன் உசேனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தியாகி அ.தமிழ்மகன் : உசேனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை தேசிய மனிதநேயம் உலகளாவிய அமைதி கூட்டமைப்பு வழங்கியது. தேசிய மனித நேயம் உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் சார்பில், சமூக சேவகர்களுக்கான முனைவர் பட்டம், விருது மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா, சென்னை , மயிலாப்பூர் முத்தமிழ் பேரவை அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு டாக்டர். எஸ்.ஈஸ்டர்ராஜன் தலைமை வகித்தார்.


சிறப்பு விருந்தினர்களாக அனைத்துலக எம். ஜி.ஆர். மன்றச் செயலாளரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர். அ.தமிழ்மகன் உசேன், புரட்சி பாரதம் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் டி.சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.கருணாநிதி, கர்நாடக அரசு துணை இயக்குனர் எம்.ஆர்.சந்திரசேகர், கர்நாடக மாநில தீயணைப்புத் துறை துணை இயக்குநர் ஜெ.எச்.ரவிசங்கர், மக்கள் ஆணையம் இதழின் ஆசிரியர் என்.கே.முத்தையா தமிழக காவலர் டைரி, ஆசிரியர் கே.ஆர்.சுரேஷ், டாக்டர் டில்லிபாபு, டாக்டர் டி.குமார், அமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர் அற்புதராஜ், துணைத் தலைவர் டாக்டர் நாகந்திரா, டாக்டர் ஜி.தமீம், டாக்டர் இ.சி.ஆர்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர், நிறுவனத் தலைவர் டாக்டர் ஈஸ்டர் ராஜன் அவர்களை பாராட்டி பேசினார்கள்.


இவ்விழாவில், சமூக சேவைக்கான பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் மற்றும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் 60 ஆண்டு காலமாக பொதுவாழ்வில் சுயநலமற்ற பொதுச் சேவையை பாராட்டி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான தியாகி அ.தமிழ்மகன் உசேன் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு, சிறந்த பத்திரிகைக்கான விருது மக்கள் ஆணையம் இதழுக்கு வழங்கப்பட்டது.


உடல் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம், விதவைப் பெண்களுக்கு தையல் மெஷின், ஏழை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, இளைஞர்கள், மாணவர்களுக்கு தலைக்கவசம், மேலும் ஏழை பெண்களுக்கு இலவச சேலை, கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இறுதியில் மோகன்ராஜ் என்பவர் நன்றியுரை கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)