எழிலகத்தில்,அண்ணா நூலகத்திலும்,கன்னிமாரா நூலகம்., கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை"

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா குறித்த அச்சம் பலரிடையே பரவியிருக்கும் சூழலில், சென்னையில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் சிலவற்றின் தற்போதைய நிலையை அறிய, நேற்று நேரில் சென்று பார்த்தோம். அதன் தொகுப்பு இது.


சீனாவில் தொடங்கிய கொரோனா புயல் சென்னையையும் அடைந்துவிட்டது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் முதலான பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடல் முதலானவற்றை அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா குறித்த அச்சம் பலரிடையே பரவியிருக்கும் சூழலில், சென்னையில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் சிலவற்றின் தற்போதைய நிலையை அறிய, நேற்று நேரில் சென்று பார்த்தோம். அதன் தொகுப்பு இது.


சென்னைஜார்ஜ் கோட்டையில் வாயிலில் காவலர்கள், அதிகாரிகள் கோட்டைக்குள் நுழையும் ஒவ்வொரு வாகனத்தின் மீதும் கிருமி நாசினியைத் தெளிப்பதோடு, வாகன ஓட்டிகளின் கைகள், கார் ஸ்டியரிங் முதலானவற்றிலும் தெளிக்கின்றனர்.


சட்டமன்றத்திற்கு வந்த எம்.எல்.ஏ-க்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனையிடப்பட்டு, சட்டமன்றத்துக்குள் அனுப்பப்படுகின்றனர். தலைமைச் செயலகத்துக்கும், சட்டமன்றத்தில் பார்வையாளர்களாக பங்கேற்க வருபவர்களுக்கும் தலைமைச் செயலகத்தின் சோதனைச் சாவடியிலேயே அனுமதி நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.


சென்னைசேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் அரசு அதிகாரிகளாலும், அரசு ஊழியர்களாலும் பயன்படுத்தப்படும் பொது வளாகம்.


நாம் அங்கு சென்போது, கொரோனா குறித்த எந்த அச்சமும் இல்லாத இடமாகக் காட்சியளித்தது எழிலகம். அரசுப் பணியாளர்களின் உடல் வெப்பத்தைக் கணக்கிட தெர்மல் ஸ்கேனரோ, கைகளுக்கு சேனிடைசரோ எதுவும் இல்லாமல் மிகச் சாதாரணமாக, அதிக மனித நடமாட்டம் உள்ள இடமாக இருந்தது எழிலகம்.அந்தக் கட்டடத்தின் சார்ஜண்ட், செக்யூரிட்டி முதலானோரிடம் பேசினோம்.


"கொரோனா குறித்த விழிப்புணர்வுக்காக பொது சுகாதாரத்துறை சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. மற்றபடி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றனர். "எழிலகத்தின் பொறுப்பு, வருவாய் நிர்வாகத்துறை ஆணையரின் கைவசம் இருக்கிறது.


சுகாதாரத்துறையின் முன்னாள் செயலர் ராதாகிருஷ்ணன்தான் தற்போது வருவாய் ஆணையராக இருக்கிறார். அவரே எந்த நடவடிக்கைக்கும் உத்தரவிடாமல் இருக்கிறார்.


அதனால் எழிலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை" என்றார் எழிலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர்.


கோட்டூர்புரத்தில்செயல்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குச் சென்றபோது, பொது மக்கள் அதிகளவில் நூலகத்தைப் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.


அண்ணா நூலகத்திலும், எந்தவித பரிசோதனையும் இல்லாமல் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நூலகத்தின் தரை தளத்திலும், முதல் தளத்திலும் போட்டித் தேர்வுகளுக்காகவும், சொந்த புத்தகங்கள் படிப்பதற்காகவும் பலர் ஒரே இடத்தில் கூடியிருந்தது அதிர்ச்சியளித்தது.


மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற அரசு அறிவிப்பு, அலட்சியமாக மீறப்பட்டிருந்தது. கழிப்பிடங்களிலும் சேனிடைசர் முதலானவை வைக்கப்படவில்லை.


அண்ணாபல்கலைக்கழக மாணவர்கள், அடையார், கிண்டி, கோட்டூர்புரம், வேளச்சேரி முதலான பகுதிகளில் இருந்து வழக்கமாக குவியும் முதியோர் என அண்ணா நூலகம் கொரோனாவுக்குப் பாதுகாப்பற்ற இடமாகவே இருந்தது.


ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 1000 முதல் 1500 பேர் வரை கூடும் அண்ணா நூலகத்துக்குத் தற்போது அரசு அளித்துள்ள விடுமுறையைப் பயனுள்ள முறையில் கழிக்க விரும்பும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் வருவது மேலும் அச்சத்தை அதிகரிக்கிறது எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகம் தமிழக அரசின் உத்தரவுக்கேற்ப மூடப்பட்டிருந்தது.


எனினும், அதே வளாகத்தில் கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்டிருந்தது. அண்ணா நூலகத்தைப் போலவே, கன்னிமாரா நூலகத்திலும் எவ்வித சுகாதாரம் சார்ந்த பரிசோதனையும் இல்லாமல், மக்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போதைய சூழல் குறித்த எந்தவித அறிகுறியும் இல்லாமல், வழக்கம்போல செயல்பட்டு வருகிறது கன்னிமாரா நூலகம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)