கொரோனாவை சித்த வைத்தியத்தில் குணப்படுத்தமுடியுமா என ஆய்வு செய்யக் கோரும் மனுக்கள்

 


கொரோனாவை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்யக் கோரிய மனுவுக்கு, மத்திய - மாநில அரசுகள் இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ரசேந்துரம், அரிதாரம், கேஷ்டம் உள்ளிட்ட 9 வகை மூலிகைகளை சேர்த்து மருந்தாக சிறிதளவு அருந்தினாலே, அனைத்து வகை வைரஸ்களும் அழிக்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ள மனுதாரர், கொரோனாவை சித்த வைத்தியத்தில் குணப்படுத்தமுடியுமா என ஆய்வு செய்யக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிய மனுக்களுக்கு பதில் இல்லை என்று கூறியுள்ளார்.


இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் மத்திய, மாநில சுகாதார துறைச் செயலாளர்கள், ஆயுஷ் அமைச்சக செயலாளர், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்