இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா.. -அமைச்சர்களைத் திணறடித்த பெண்!

கூட்டுறவுத் துறை சார்பில் விருதுநகரில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய தொடக்க விழா நடைபெற்றது.


கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் பங்கேற்ற இவ்விழா மேடையில், கூட்டுறவு வங்கிக் கடன் பெறுவதற்காக வந்த பாத்திமா என்பவர், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது குறித்து அமைச்சர்களின் முகத்துக்கு நேராகவே கேள்வி எழுப்பினார்.


"நீங்க ஓட்டு போடாம இருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா? அதை யோசிங்க மொதல்ல.." என்று கேட்க, செல்லூர் ராஜு அவரிடம், "நான் சொல்றத கேளுமா.. மூணு விதிவிலக்கு.. அந்த விதிவிலக்கை.." என்று கூற, பாத்திமாவோ,


"இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா?" என்று தொடந்து வாதம் செய்ய, "அதெல்லாம் ஒன்னும் இல்லமா.. நீங்க கவலையே படாதீங்க.." என்று சமாளித்தார்.


"அமைதியா இருங்க... எடப்பாடியார் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.." என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி சொன்னதையெல்லாம், பாத்திமா காதில் வாங்கவே இல்லை.


பொது நிகழ்ச்சிகளில் இது போன்ற கேள்விகளைக் கேட்டு யாரும் தங்களைத் திணறடித்துவிடக் கூடாது என்று பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்தாலும், இதுபோல் நடந்து, ஆட்சியாளர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிவிடுகிறது


Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image