திருச்சி மாவட்டத்தில் ஊசிபோட்டு காசு பார்க்கும் மெடிக்கல் ஸ்டோர் வியாபாரிகள்

திருச்சி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதி கிராமங்களில் சமீபகாலங்களாக பள்ளிப் படிப்பை தாண்டாதவர்கள் எல்லாம் டாக்டர்களாகவும், லேப் வைத்திருந்தவர்கள், கம்பவுண்டராக இருந்தவர்கள் எல்லாம் ஊசி போடுவதும், மருந்து மாத்திரைகள் தருவதும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.


மெடிக்கல் ஷாப்களின் வேலை நேரம் முழுவதும் பார்மசி படித்த, ஒரு தகுதி வாய்ந்த நபர் பணியில் இருக்க வேண்டும் என்கிறது சட்டம். ஆனால் இந்த சட்டத்தையெல்லாம் எந்த மெடிக்கல் ஷாப்பும் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை .


உண்மையான மருத்துவர்களிடம் சென்றால் கன்சல்டிங் ஃபீஸாக 200 ரூபாய் வரை தர வேண்டும். ஆனால் பள்ளிப்படிப்பைக் கூட தாண்டாத இந்த போலி மருத்துவர்களுக்கு போன் செய்தாலே போதும். வீடு தேடி வந்து ஊசி போட்டு, மருந்து மாத்திரைகளையும் தந்து அனைத்தையும் நூறு ரூபாய்க்குள்ளேயே முடித்துவிடுகிறார்கள்.


இது குறித்து கேட்டதற்கு, அவர்கள் என்ன படித்திருந்தால் எங்களுக்கென்ன? குறைந்த செலவில் வியாதியைக் குணமாக்குகிறார்களே! அது போதும் எங்களுக்கு என கிராம மக்கள் அப்பாவியாகச் சொன்னதைக் கேட்டதும் நமக்கு நெஞ்சு பதைபதைத்தது.


அதா குழம்பு ருந்தது அவளின் அதாவது கோழி குருடாய் இருந்தால் என்ன, குழம்பு ருசியாக இருந்தால் போதும் என்பதுபோல் இருந்தது அவர்கள் பதில்.


அவளின் இப்படி பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போலி மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது சுகாதாரத்துறை.


இந்த போலி மருத்துவர்களிடம் நோயாளிகள் பெரும்பாலும், தலைவலி, சிறுகாயங்கள், இருமல், சளி போன்ற பிரச்சினைகளுக்காகத்தான் வருகிறார்கள். எந்த நோய்க்கு எந்த ஊசி போட வேண்டும், எந்த மருந்து கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு போலி டாக்டர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.


கிராமப்புற மெடிக்கல் ஷாப்களில் சாதாரண தலைவலி, காய்ச்சல் என்று போனால், உள்ளே கூப்பிட்டு தனி அறையில் வைத்து ஊசி போட்டு பணம் பார்த்து விடுகின்றனர். உடம்பு வலிக்கும், காய்ச்சலுக்கும் தரப்படும். பாரசிட்டமல் மருந்தைக் கூட மெடிக்கல் ஷாப்களில் விற்க தடை உள்ளது. மருந்து சீட்டில் டாக்டர்கள் எழுத்தி தரும் மருந்துகளை மட்டுமே மெடிக்கல் ஷாப்களில் தர வேண்டும் என்பது மருத்துவத்துறை விதியாகும்.


ஆனால் பெரும்பாலான மெடிக்கல் ஷாப்கள் இந்த விதிகளை மீறித்தான் செயல்படுகின்றன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், கிராமப்புறங்களில் போதைக்காக அதிக விலை கொடுத்து மது அருந்துவதற்கு பதிலாக மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அவில் மாத்திரையை மிகுந்த போதைக்காக இளைஞர்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.


மேலும் அதைவிட அதிக பவர் உள்ள போதை மாத்திரைகளும் கிராமப்புறங்களில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் ரகசியமாக விற்கப்படுவதாக தகவல்கள் உலா வருகின்றன. இந்த போலி மருத்துவர்களின் மருந்து பெட்டியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் அதிகம் இருப்பதை காணமுடிகிறது.


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிய சமயங்களில் தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு, ஏராளமான போலி டாக்டர்கள் சிக்கினார்கள். பரம்பரை வைத்திய மருத்துவர்கள் எல்லாம் பயந்து போய் பதுங்கினார்கள்.


பதுங்கியவர்கள் தற்போது மீண்டும் வெளிவந்து தனது வழக்கமான பணியை துவங்கி விதவிதமான கார்களில் வலம் வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரகசிய திடீர் ஆய்வு மேற்கொண்டால், பல மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்கள் ஊசியும் கையுமாக பிடிபடுவார்கள் என்பது உண்மை .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்