இந்தியாவில் பெண்களுக்கான-பிரத்யேக சட்டங்களும் உரிமைகளும்! பெண்களின் சுதந்திரத்தை உறுதிபடுத்தும் சட்டங்கள்

பெண்கள் சுதந்திரமாக வலம் வருகிறார்கள் என்றால்  அவர்களுக்காக இந்தியாவில் அளிக்கப்பட்டுள்ள பிரத்யேக சட்டங்கள் மற்றும் உரிமைகளே காரணம். இருப்பினும் பல பெண்களுக்கு அவர்களுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் என்னென்ன என்பதே தெரிவதில்லை.


பெண்களுக்கான சட்டங்களைத் தெரிந்துகொண்டு  பிரச்னை நேரும்போது அவற்றைப் பயன்படுத்துக்கொள்வது பெண்களுடைய கடமையாகும்.  என்னென சட்டங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.


பெண்களுக்கான சம ஊதிய உரிமை : சம ஊதியச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஊதியத் திட்டத்தில் பாலின அடிப்படையில் ஊதியம் அளிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. அது மாத சம்பளானாலும், தினசரி ஊதியமானாலும் சமமாக அளிக்கப்பட வேண்டும். அதேபோல் பெண்கள் தனக்கு நிகராக வேலைபார்க்கும் ஆணின் சம்பளத்தோடு ஒப்பிட்டு தனக்கான ஊதியத்தையும் நிர்நயித்துக் கேட்க உரிமை உண்டு.


கண்ணியம் மற்றும் ஒழுங்கை தற்காத்துக் கொள்ளும் உரிமை : ஏதேனும் நிகழ்சியில் பெண்தான் குற்றவாளி என உறுதிபடுத்தப்பட்டால் அவரை பரிசோதனை செய்யும் உரிமை மற்றொரு பெண்ணிற்கு மட்டுமே உண்டு. ஆண் கை வைக்க உரிமை கிடையாது.


பணியிடத்தில் பாலியல் தொல்லைகளை பதிவு செய்யும் உரிமை : வேலை செய்யும் இடத்தில் ஆண்களால் பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் இருந்தால் அவர் மீது புகார் செய்து நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் படி ஒவ்வொரு அலுவலகத்திலும்,
எஸ்,முருகேசன்
 இண்டர்னல் கம்ப்ளைண்ட் கமிட்டி இருக்கும். அவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் எழுதப்பட்ட பதிவுடன் புகார் அளிக்க வேண்டும். அதுவும் 3 மாதத்திற்குள் பதிவிட வேண்டும்.


பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் : இந்திய அரசியலமைப்புச் சட்டம் 498 படி, வீட்டில் உள்ள மனைவி, தங்கை, அம்மா, தோழி என பெண்கள் யாராக இருப்பினும் அவர்களை வாய் மொழியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ துன்புறுத்தினால் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு தண்டனை கிடைக்கும். 3 ஆண்டுகளுக்கு அபராதத்துடன் தண்டனை கடுமையாகப்படும்.


இலவச சட்ட உதவி பெறும் உரிமை : சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் படி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் தனக்குத் தேவையான சட்ட உதவிகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் உரிமை உண்டு. நீதி மன்றத்திலேயே அந்த பெண்ணிற்காக வாதாட சட்ட வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தருவார்கள்.


இரவில் கைது செய்ய உரிமை கிடையாது : தவிர்க்க முடியாத சில வழக்குகளைத் தவிர, மற்ற வழக்குகளுக்கு ஒரு பெண்ணைக் கைது செய்ய நினைத்தால் நீதிபதியின் அனுமதியில்லாமல் கைது செய்யக் கூடாது. அதேபோல் சூரிய மறைவிற்குப் பின்னும் சூரிய உதயத்திற்கு முன்பும் ஒரு பெண்ணை கைதுசெய்ய அனுமதி கிடையாது.


மறைமுகமாக புகார் அளிக்கும் உரிமை ( virtual complaints ) : சட்டம் ஒரு பெண்ணிற்கு புகார் அளிக்க வேண்டும் என்றால் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றில்லை. எந்த இடத்திலிருந்தும் மின்னஞ்சல் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் தகவல் அளித்து புகாரைப் பதிவு செய்யலாம். புகாரை ஏற்றுக் கொண்ட காவலர் அந்தப் பெண்ணின் இல்லத்திற்கு பிரச்னையை விசாரிக்க மறுநாளே கான்ஸ்டபிள் ஒருவரை அனுப்பி வைப்பார்கள்.


ஒழுங்கற்ற தன்மையைக் கண்டிக்கும் உரிமை : பெண்ணின் உடல் பாகங்களை மனதளவில் புண்படும்படி வர்ணித்தாலோ, பேசினாலோ அது சமூகத்திற்கு எதிரானது. இதனைக் கண்டித்து அந்தப் பெண் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்க உரிமை உண்டு.


பின் தொடரும் ஆண் மீதும் புகார் அளிக்கும் உரிமை : சட்டம் ஐபிசி 354D படி, ஒரு பெண்ணின் அனுமதியின்றி பின் தொடர்ந்தாலோ, சந்தித்துப் பேச முற்பட்டாலோ, அவர் மீது புகார் அளிக்க உரிமை உண்டு. ஒருவேலை அந்தப் பெண் எச்சரித்தும் பின் தொடர்ந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அதுமட்டுமன்றி அந்தப் பெண்ணின் மின்னஞ்சல், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தொந்தரவுகள் கொடுத்தாலும், அனுமதியின்றி அவரின் தகவல்களை எடுக்க நினைத்தாலும் புகார் அளிக்க முழு உரிமை உண்டு.


முதல் தகவல் அறிக்கை இல்லாமலேயே நடவடிக்கை எடுக்கும் உரிமை : ஒரு பெண்ணிற்கு ஏதேனும் பிரச்னை எனில் அந்த இடத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கப்பட்ட நபரை முதல் தகவல் அறிக்கை இல்லாமலேயே விசாரணைக்கு உட்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணைக்குப் பிறகு அவர் மீதான குற்றத்தைப் பொறுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்