கவனிப்பாரற்ற விருகம்பாக்கம் தொகுதி நேரடி ரிப்போர்ட் ....

சென்னையில் உள்ள விஐபி தொகுதிகளில் முக்கியமான தொகுதி விருகம்பாக்கத்தை சொல்லலாம் காரணம் இந்த பகுதியில் சினிமாகாரர்கள் அரசு ஊழியர்கள் கோயம்பேடு மார்க்கெட் பிரபலமான ஸ்கூல் காலேஜ் அரசு ஆஸ்பத்திரி நிறைந்த பகுதி இதைப் பற்றி அறிய ஒரு நேரடி ரிப்போர்ட்.


இந்த தொகுதியில் VN ரவி எம்.எல்.ஏவாக உள்ளார். இவரால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் பல பேருக்கு இவரை தெரியவில்லை இந்த பகுதி எல்லா மக்களும் சமமாக வாழ்வதால் அதிமுக திமுக சமமாக உள்ளது.


மேலும் கோயம்பேடு முதல் விருகம் பாக்கம் ஆற்காடு சந்திப்பு வரை ரோடு அகலப்படுத்தாமல் உள்ளது பெரிய குறை மற்றொன்று எம்ஜிஆர் நகர் பகுதி மார்க்கெட் இங்கு அசோக்பில்லரிலிருந்து நெசப்பாக்கம் வரும் அண்ணாசாலை அடிக்கடி போக்குவரத்து பாதிப்புக்குள்ளாவது குறிப்பாக எம்ஜிஆர் மார்க்கெட் கேகே நகர் சாலை சந்திக்கும் இடம் அருகில் பேருந்து நிலையம் ஆஸ்பத்திரி பெட்ரோல் பங்க் பேங்க் நிறைந்த பகுதியில் நான்குபக்கமும் பூக்கடை இளநீர் கடை ரோட்டோர டிபன் கடை ஆட்டோ மாட்டு வண்டி என காலை மாலை ஆக்கு பேடு செய்து கொள்வதால்.


காலையில் வேலைக்கு ஸ்கூலுக்கு போகும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் சமீபத்தில் எம்ஜிஆர் நகர் அரசு பள்ளியில் பழைய மாணவர் பள்ளியில் படிக்கும் மாணவர் இடையே மாணவிகள் யாரை காதல் செய்கிறீர்கள் என்ற போட்டியில் சண்டை போட்டுக்கொண்டார்கள் பள்ளியின் முன் வாகனத்தை நிறுத்தி மாணவர்களுக்கு இடையூறு செய்கிறார்கள்


இரவில் டிபன் கடை மது அருந்தும் இடமாக உள்ளது. அருகில் பள்ளிக்கூடம் உள்ளது. இதை உடனே அகற்ற வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.மேலும் போலீஸ் பூத் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்குபவர்கள் வெளியே சாப்பிடுவது.


அங்கேயே சிறு நீர் கழிப்பதுமாக இருப்பதால் பெண்கள் முகம் சுளிக்கிறார்கள் இந்த புதிய அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு உள்ள பகுதி இதை தக்கவைக்க வேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சிக்கு உள்ளது மற்றபடி பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.


அதுபோல் மீனாட்சி கல்லூரி முன் ராயபுரம் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் போல் சில பேர் ஊடுருவி கஞ்சா விற்பதாகவும் இதை காலை 7 மணி to 9 மணிக்குள் முடிந்து விடுவதாகவும் கூறுகிறார்கள்


அங்கு பயிலும் மாணவர்கள் மற்றபடி தண்ணீர் அடிப்படை பிரச்சனை எதுவும் குறை கிடையாது மேலும் திமுகவில் உட்கட்சி பூசல் பதவி போட்டி இருப்பதால் திமுக தொண்டர் இல்லாமல் திணறுகிறது செயலில் இறங்கினால் விருகை தொகுதி அதிமுக கோட்டையாகும் என்கிறார்கள் மேலும் முதல்வரின் பல நல்ல திட்டங்களை மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள் என்கிறார் நமது நிருபர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)