ஊரடங்கில் மதுபோதை ”அங்கப்பிரதட்சணம்” செய்ய வைத்த போலீசார்..!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மதுகுடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுற்றிதிரிந்த 2 இளைஞர்களை பிடித்து போலீசார் வித்தியாசமான தண்டனை வழங்கினர்.


மேலான்முறைநாடு என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குளம் போலீசார், கொரோனா அச்சமின்றி அலட்சியத்துடன் அந்த வழியே குடிபோதையில் சென்ற 2 இளைஞர்களை மடக்கி பிடித்தனர்.


பின்னர், மது குடிப்பதற்கான வெளியே வரமாட்டேன் என்று கூறிக்கொண்டே சாலையில் படுத்து முன்னும் பின்னும் உருளுமாறு நூதன தண்டனை வழங்கினர்.