திருப்பதிக்கு வந்த கொரோனா..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த மகாராஷ்டிரா பக்தருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால் அலிபிரியில் மலைப்பாதை மூடப்பட்டது.


அந்த பக்தர் காய்ச்சல் இருமலுடன் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அலிபிரியில் இருந்து திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளும் மூடப்பட்டது. மேலும் கோவிலை மூடுவது குறித்தும் அரசுடன் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.