ரயில்களில் அத்தியாவசியமில்லாமல் மக்கள் பயணிக்க வேண்டாம்: ரயில்வே எச்சரிக்கை..

ரயில்களில் கொரோனா பாதித்த நபர்கள் 14 பேர் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அத்தியாவசியமில்லாமல் ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.


ட்விட்டர் பக்கத்தில் இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவுகளில், மும்பையில் இருந்து ஜபல்பூருக்கு 16ம் தேதி சென்ற ரயிலில் பயணித்த 4 பேருக்கும், டெல்லியிலிருந்து ராமாகுண்டத்துக்கு (Ramagundam) 13ம் தேதி சென்ற ரயிலில் பயணித்த 8 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெங்களூரு- டெல்லி ராஜ்தானி ரயிலில், கொரோனா தனிமை முத்திரை குத்தப்பட்ட 2 பேர் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டு இறக்கிவிடப்பட்டதாக கூறியுள்ள ரயில்வே அமைச்சகம், ஆதலால் அத்தியாவசியமில்லாமல் ரயில்களில் மக்கள் பயணிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.