மதுரையில் மளிகை பொருட்கள் வேண்டி மக்கள் போன் செய்தால், வீட்டிற்கே
மதுரையில் மளிகை பொருட்கள் வேண்டி மக்கள் போன் செய்தால், வீட்டிற்கே நேரில் சென்று விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் பொதுவெளியில் நடமாடுவதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக, 100 வார்டுகளிலும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே நேரில் சென்று விநியோகம் செய்ய மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 17 இடங்களில் இருந்து மளிகை பொருட்கள் விநியோகம் நடைபெறும் என்றும், அதற்காக சம்மந்தப்பட்ட மளிகை கடைகளின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, அண்ணா நகர், கே.கே.நகர், கூடல் நகர், விளாங்குடி, தத்தனேரி, ஆரப்பாளையம், அரசரடி, காளவாசல், தெப்பக்குளம் உள்ளிட்ட 17 பகுதிகளுக்கான எண்களை வெளியிட்டுள்ளது.