கொரோனா ஆபத்து,கலெக்டர்களுக்கு அரசு கடும் உத்தரவு: சிறப்பு குழு அமைப்பு

சென்னை: இந்தியாவில்  கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும்  வேகமாக பரவிவரும்  நிலையில் உடனடியாக முன்னச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ள தமிழக அரசு   மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


சீனாவில்  அச்சுறுத்தி  வரும் கொரோனா வைரஸ் இப்போது உலக நாடுகளுக்கு வேகமாக பரவி  வருகிறது.  


இந்தியாவிலும்  ராஜஸ்தான், டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட  மாநிலங்களில் கொரோனா பாதிப்பு  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அதனால் நாடுமுழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனோ   பயத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா  உள்ளிட்ட முக்கிய   தலைவர்கள் ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டனர்.


பெங்களூரில் உள்ள 13 மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலைக்கு வராமல்,   வீட்டிலிருந்தே வேலை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.


மேலும் தங்கள்   நிறுவனங்களின் ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கவும்   அறிவுறுத்தியுள்ளது. ெவளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு   பிறகே அனுமதிக்கப் படுகின்றனர்.


இந்நிலையில் தமிழக அரசும் கொரோனா வைரஸ்   பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள  மாவட்ட  கலெக்டர்களுக்கு அறிவறுத்தியுள்ளது.


இது குறித்து தமிழக அரசின் தலைமை   செயலாளர் கே.சண்முகம் விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் உள்ள விவரங்கள்:


உடனடியாக அரசு, தனியார் மருத்துவனை டாக்டர்களுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும்.


டாக்டர்கள் கோவிட்-19 பாதித்தவர்களை  எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட வேண்டும்.


*  கோவிட்-19 பாதித்தவர்களை எப்படி சோதனைக்கு உட்படுத்த வேண்டும், சோதனை   கூடங்களில் ‘ரத்த மாதிரிகளை’ எப்படி கையாள வேண்டும், அவர்களை என்ன   மாதிரியான பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.


கொரோனா நோய் பற்றிய சந்தேகங்களை தெரிந்துகொள்ள தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அமைக்கப்பட்டு, டெலிபோன் எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை ஒருவர்கூட இந்த வைரசால் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.


அதில் மாவட்ட கலெக்டர்கள் அரசு, தனியார் டாக்டர்களுடன் கொரோனா குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். கொரோனா பாதித்திருந்தால், நோயாளிகளை எப்படி கையாள வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தவும், நோய் அறிகுறி குறித்த சந்தேகங்களை அறிந்து கொள்ளவும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், “கொரோனா ஹெல்ப்லைன்” எண்களை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி 044-29510400, 044-29510500, 9444340496, 8754448477 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)