வீட்டிலேயே சேனிடைசர் தயாரிப்பது எப்படி....
கடைகளில் மூன்று மடங்கு விலை வைத்து விற்கப்படும் 'சேனிடைசர்' எனப்படும் கிருமி நாசினி யை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கொரோனா வைரஸின் பாதிப்பு தமிழகத்தில் பெரிய அளவில் இல்லை என்றாலும் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் கிருமித் தொற்றுகள் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனால் 'சேனிடைசர்' எனப்படும் கிருமி நாசினி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மூன்று மடங்கு விலை வைத்து விற்கப்படுகிறது ஆனால் இந்த சேனிடைசர்களை நாம் வீட்டிலேயே எளிமையாக தயாரித்து பாட்டில்களில் அடைத்து பயன்படுத்தலாம் என்கின்றனர் வேதியியலாளர்கள்.
ஆல்கஹால் மற்றும் நான் ஆல்கஹால் என்று இரண்டு வகைகள் இதில் இருக்கின்றன. ஆல்கஹால் வகைகளை பயன்படுத்தும்போது தண்ணீர் போட்டு கைகளை கழுவ வேண்டிய அவசியமில்லை அவை காற்றில் தானாக ஆவியாகிவிடும். ஆல்கஹால் சேனிடைசர் என்பது 70 சதவீத எத்தனால் மற்றும் 30 சதவீதம் ஐஸோ ப்ரொபைல் ஆல்கஹால் அடங்கியிருக்கிறது.
ஆல்கஹால் சேர்த்த சேனிடைசர்கள் நிச்சயம் கிருமிகளை அழிக்கும். விரல்களில் இருக்கும் கிருமிகளை விரட்டி அடிக்க இதைபயன்படுத்தலாம்.
வீட்டில் தயாரிக்கும் சேனிடைசர் அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பாக இருக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான சேனிடைசரை நீங்கள் வீட்டிலேயே பெறமுடியும்.
எத்தனால் மற்றும் ஐஸோ ப்ரொபைல் ஆல்கஹால் போன்ற திரவங்கள் அனைத்து வேதிப்பொருள் கடைகளிலும் கிடைக்கின்றன. மேலும் அமேசான் போன்ற இணையதளங்களிலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடிகிறது.
எனவே சானிடைசர்களை வீடுகளில் நாமே தயாரித்து பாதுகாப்பாக இவற்றை பயன்படுத்தி பயன் பெறலாம்.