திருச்சி - இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமானம் ரத்து.. திருச்சி- மலேசியா விமானமும் ரத்து.

திருச்சி- மலேசியா இடையே இயக்கப்படும் ஏா் ஏசியா விமானங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே திருச்சி -மலேசியா இடையே தினமும் 3 முறை இயக்கப்பட்டு வந்த ஏா் ஏசியா விமானம் மார்ச் 16ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில், திருச்சிக்கு தினமும் காலை 8.55 மணிக்கு வந்து 9.25 மணிக்கு புறப்படும் விமானமும், நள்ளிரவு 11.40 மணிக்கு வந்து 12.10க்கு புறப்படும் மலேசியா விமானமும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.


இதேபோல் திருச்சி-மலேசியா இடையே மலிண்டோ நிறுவனமும் திருச்சிக்கு தினமும் காலை 9.45 மணிக்கு வந்து 10.35க்கு புறப்பட்டுச் செல்லும் வகையிலும் இரவு 10.35 மணிக்கு வந்து 11.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் வகையிலும் இரு விமான சேவைகளை வழங்கி வருகிறது.


இந்நிறுவனமும் திங்கள்கிழமை முதல் (மார்ச் 16), இரவு 10.35 மணிக்கு வந்து செல்லும் விமான போக்குவரத்திலும் மட்டும் மாற்றம் செய்துள்ளது.


அதாவது, மார்ச் 16, 18, 20, 22, 25, 27, ஏப்ரல் 1, 3, 8, 10 ஆகிய 10 நாள்கள் மட்டுமே இயக்கப்படும். இது ஏப்ரல் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.


காலையில் வந்து செல்லும் விமானம் வழக்கம்போல வந்து செல்லும் எனவும் அறிவித்துள்ளது.பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது திருச்சியில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமானது தனது சேவையை குறைத்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் காலை 9.10 மணிக்கு வந்து 10.10 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி செல்லும்.


இதேபோன்று மாலை நேரத்தில் 3.05 மணிக்கு திருச்சிக்கு வந்து 4.05 மணிக்கு இலங்கை நோக்கிப் புறப்பட்டுச் செல்லும். இந்த விமானத்தின் மாலை நேர சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.


இதேபோல் இந்த விமானம் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களிலும் மாலை நேர சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் முன்பதிவு செய்பவர்களுக்கு காலை நேர விமான சேவையில் இடம் அளிக்கப்படும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)