துருக்கியில் இருந்து தாயகம் திரும்பி உள்ள ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்

துருக்கியில் இருந்து திரும்பி வந்துள்ள இந்திய எட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா


 அவருடன் மற்றொரு வீரரான ரோஹித் யாதவும் திரும்பி வந்துள்ளார்.


இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சாய்) உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து சாய் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாட்டியாலாவில் உள்ள நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு மையத்தில் நீரஜ் சோப்ரா தங்கியிருக்க விரும்பினால் மற்ற வீரர்களுடன் தொடர்பு கொள்ளாமல் தன்னை தானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீரஜ் சோப்ராவுக்கும் அவருடன் திரும்பி வந்துள்ள ரோஹித் யாதவுக்கும் விளையாட்டு மையத்தில் தனி அறைகள் வழங்கப்படும்.


இந்த அறைகளுக்கு அருகே உள்ள பழைய உடற்பயிற்சி கூடத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேவேளையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்துள்ள சிவ்பால் சிங், விபின் கசனா ஆகியோர் பாட்டியாலா மையத்தில் தங்காமல் தங்களது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.


நீரஜ் உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்துள்ள வீரர்கள் அனைவருக்கும் கரோனா அறிகுறிகளுக்கான சோதனை விமான நிலையத்தில் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்