செய்தி நிறுவனங்களையும் உலுக்கி எடுக்கும் கொரோனா...

லன்டன்: கொரோனா வைரஸ் தொற்றால், செய்தி நிறுவனங்களும், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளன.


தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் உள்ள சி.என்.என்., அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து, அலுவலகத்தை பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளித்துச் சுத்தப்படுத்தவுள்ளனர்.


இதற்காக, குறைந்தது அடுத்த 24 மணி நேரத்திற்கு, சி.என்.என்., தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
லன்டன் பி.பி.சி., நியூஸ்


லன்டன் பி.பி.சி., செய்தித் தொலைக்காட்சி, கொரோனா வைரஸ் தொற்றால் தன் ஊழியர்கள் பலரையும் வீட்டிலிருந்த படியே வேலை பார்க்க, சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. ஆனால், சில நிகழ்ச்சிகள் அலுவலகத்திலிருந்து இயங்க வேண்டியிருந்ததால், குறிப்பிட்ட சில ஊழியர்கள் மட்டும் அலுவலகம் வந்து, வேலை செய்து வந்துள்ளனர்.


இந்நிலையில், பி.பி.சி., செய்தி அறையிலும், கொரோனா வைரஸ் தொற்று தன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனால், அரசியல் செய்திகள் (Politics Live) போன்ற சில நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாகவும், பார்வையாளர்கள் பங்கேற்க முடியாததால் சில நிகழ்ச்சிகளின் கேள்வி நேரம் மாற்றப்படுவதாகவும், சில நிகழ்ச்சிகளின் கேள்வி நேரம் தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் பி.பி.சி., நியூஸ் இயக்குநர் பிரான் அன்ஸ்வர்த் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் முன்னெச்சரிக்கை


'உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வராமல், வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என, சில நாட்களுக்கு முன் டுவிட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது.


சுமார் 10 ஆயிரம் பேர் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் சூழலில், கொரோனா தொற்றால், 'தங்கள் நிறுவன ஊழியர்கள் தேவையற்ற வியாபார சந்திப்புகள் மற்றும் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்' எனவும் அந்நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.  


'கொரோனா வைரஸ் தொற்று, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது வேகமாகப் பரவுவதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


கூடுமானவரை, தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரச் செய்யாமல், வீடுகளிலிருந்து பணியாற்றும்படி அறிவுறுத்த வேண்டும். அப்போதே கொரோனா பரவலை தவிர்க்க முடியும்' என, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு