பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கமிஷனர் ரோஜா பூ வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.


விழாவில் பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ரோஜா பூ வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஈஸ்வரமூர்த்தி, இணை கமிஷனர்கள் மகேஷ்வரி, விஜயகுமாரி, ஏ.ஜி.பாபு, எழில் அரசன், ஜெயகவுரி உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதைத்தொடர்ந்து சென்னை பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியிலும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


இந்த நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் உள்பட 800 பெண் போலீசார் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு