வெயிலுக்கு கொரோனா வைரஸ் பரவாதா...உண்மை என்ன;உலக சுகாதார நிறுவனம் ஷாக் விளக்கம்

வெயிலுக்கு கொரோனா வைரஸ் பரவாதா? உண்மை என்ன? உலக சுகாதார நிறுவனம் ஷாக் விளக்கம்


வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவித்துள்ளது.


இந்திய மக்களிடையே கொரானா வைரஸ் பரவுவது குறித்து சில நம்பிக்கைகள் உள்ளது. அதாவது இந்தியா வெப்பமயமான நாடு.


இங்கு கொரோனா வைரஸ் பரவாது அப்படியே பரவினாலும் பாதிக்காது என்று நம்புகிறார்கள். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டெட்ராஸ், 'உலகம் முழுக்க எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி கொரோனா வைரஸ் பரவி வருகிறது.


எனவே மக்கள் அனைவரும், நோயின் தீவிரத்தன்மையை புரிந்துகொண்டு, புத்திசாலித்தனமாக நோயை எதிர்த்து நிற்பது மட்டுமே இப்போது அவசியம் ஆகும்


வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்தோடு செயல்பட்டு, நோய்ப் பரவுவதற்கு வழிவகுத்துவிட வேண்டாம். மாறிவரும் தட்பவெப்பதுக்கு ஏற்ப கொரோனா எப்படித் தன்னை தகவமைத்துக்கொள்ளும் என்பது கணிப்புக்கு அப்பாற்பட்டதாக உள்ளது' என்றார்.


எனவே மக்களே இப்ப வெயில் காலம் வந்திருச்சு அதனால் கொரோனா பரவாது என்றொல்லாம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் வரும் வதந்திகளை நம்பாதீர்கள்