பெண்களின் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தேசிய கருத்தரங்கு

ஒருங்கமைக்கப்படாத துறையில் பணிபுரியும் பெண்களின் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தேசிய கருத்தரங்கு.


திருச்சிராப்பள்ளி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின்  பொருளாதாரத் துறை மற்றும்  வரலாற்று துறை இணைந்து  இந்தியாவின்  ஒருங்கமைக்கப்படாத துறையில் பணிபுரியும் பெண்களின் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தலைப்பில் தேசிய கருத்தரங்கு  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  


எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் பாலினம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆலோசகர்
 முனைவர் வெங்கடேஷ் பி ஆத்தர்   பொருளாதாரத் துறையில் பெண்களின் மேன்மையை பற்றி சிறப்புரையாற்றினார்.  


வரலாற்றுத் துறை பேராசிரியர் பொணி கருத்தரங்கு நோக்கம் எடுத்துரைத்தார்.  
முன்னதாக பொருளாதாரத் துறை தலைவர் முனைவர் செந்தாமரை வரவேற்க,
 நிறைவாக வரலாற்று துணைப் பேராசிரியர் முனைவர் தெரசா நன்றிக் கூறினார்.