அந்த பக்கம் உலமாக்கள்.. இந்த பக்கம் பாஜக நாராயணன்.. ரஜினிகாந்த் மீடியேட்டராக மாறுகிறாரா;...

சென்னை: ஒரு விஷயம் புரியவே இல்லை.. ஒரு பக்கம் உலமாக்கள் ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்து பேசுகிறார்கள்... இன்னொரு பக்கம் பாஜக நாராயணன் வந்து பேசுகிறார்.. இதை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது?


சிஏஏ விவகாரத்தில் கருத்து சொல்லாமல் சும்மா இருந்திருக்கலாம் நடிகர் ரஜினிகாந்த்.. தேவையில்லாமல் வந்து பாஜகவுக்கு ஆதரவான முழு கருத்தை சொல்லிவிட்டு போனார்..


முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று வழக்கம்போல் பஞ்ச் பேசிவிட்டு போனதுதான் எரிகிற எண்ணெயில் பெட்ரோலை தூக்கி கொட்டியது போலாகிவிட்டது.


2-வது முறை கருத்து சொல்லும்போதாவது, பகிரங்கமான ஆதரவு அல்லது பகிரங்கமான எதிர்ப்பு என்று உறுதியாக தெளிவுபடுத்தியிருக்கலாம்..


ஆனால் யாரையுமே குறிப்பிட்டு சுட்டிக்காட்டாமல், அதே சமயம் தனக்கு எந்தவித பாதகமும் இல்லாத மாதிரியான ஒரு வழவழ கொழகொழா கருத்தை உதிர்த்துவிட்டு போனார்.


"ரஜினி பாஜகவுடன் இணைந்து அரசியலுக்கு வருவாரா?".. நிருபர்கள் கேள்விக்கு நக்கல் பதில் கொடுத்த ராதாரவி


விளக்கம்
இதற்கு பிறகுதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது.. சிஏஏ சட்டம் பற்றி சரியான விளக்கத்தை தருகிறேன் என்று அபுபக்கர் போனார்.. விளக்கம் தர அவருடன் வேறு யாருமே போகவில்லை..


தனியாகத்தான் போயஸ் கார்டன் சென்றிருந்தார்.. உள்ளே போய் விட்டு வந்து ரஜினிகாந்துக்கு நன்றி சொன்னதாக வெளியே பேட்டி தந்தார்.


நிர்வாகிகள்
அடுத்ததாக, நேற்று மதுரையைச் சேர்ந்த ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்கள். எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகளில் இதுவும் ஒன்று. இவர்களின் சந்திப்புக்கு இஸ்லாமியர்களிடையே இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு தரப்பினர் இதற்கு ஆதரவாகவும், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
ரஜினிகாந்த்
முதலில் பொது விஷயத்தை பேச ஒருத்தரை வீட்டிற்குதான் வரவழைக்க வேண்டுமா? அங்கே பெண்கள், குழந்தைகள் போராடிட்டு இருக்காங்களே..


டெல்லிக்கு போய் ஆதரவு தெரிவிக்க வேண்டியதுதானே? குறைந்த பட்சம் வண்ணாரப்பேட்டைக்காவது ரஜினிகாந்த் போய் தன் சிஏஏ குறித்த நிலைப்பாட்டை விளக்கிவிட்டு வந்திருக்க வேண்டியதுதானே?


ஓரிரு முஸ்லீம் தலைவர்களை வீட்டுக்கு வரவழைத்து பேசிவிட்டால், எப்படி ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாய மக்களும் அமைதியாகி விடுகிறார்கள் என்று ரஜினிகாந்த் நினைக்கலாம்? என்று இஸ்லாமியர்கள் கேட்கிறார்கள்.


ஜவாஹிருல்லா.
காதர் மொஹைதீன் இருக்கிறார்... ஜவாஹிருல்லா, தமீமுன் அன்சாரி போன்றோர் உள்ளனர். இஸ்லாமியர்களின் பிரதிநிதிகளாக பலர் உள்ளனர்.


இவர்கள் அங்கீகாரத்துடன் இஸ்லாமிய மக்களின் ஆதரவுடன் பொறுப்பில் உள்ளவர்கள்.. இஸ்லாமிய பெருமக்களுக்காக அரசியல் ரீதியான கருத்துக்களை முன்வைத்து போராடி வருபவர்கள்.. தவறுகளை துணிந்து அறிக்கை மூலம் கேட்பவர்கள்.. அப்படி இருக்கும்போது, இந்த தலைவர்களை ரஜினிகாந்த் ஏன் சந்தித்து பேசவில்லை? பேசக்கூட தோணவில்லையே ஏன்?


சாதாரண நடிகர்
ரஜினி இன்னும் அரசியலுக்கே வரவில்லை... கட்சியும் ஆரம்பிக்கவில்லை... அவரது கொள்கை என்னவென்றே இதுவரை நமக்கு பிடிபடவில்லை.. அரசு தரப்பிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லை... இந்த செகண்ட் வரை அவரை ஒரு சாதாரண நடிகர்... வேண்டுமானால் உச்ச நட்சத்திர அந்தஸ்து உள்ளவர் என சொல்லலாம்.. அவ்வளவுதான்..


ஆனால் ஏன் இஸ்லாமிய பிரதிநிதிகள் என்ற முகவரியுடன் சிலர் சந்திக்கின்றனர்... கூடவே பாஜகவினரும் போய்ச் சந்திக்கின்றனர். இது தன் மீதான பாஜக ஆதரவு நபர் என்ற கறையைப் போக்கவா அல்லது இஸ்லாமியர்களுக்கும் மத்திய பாஜககவுக்கும் இடையே தூதுவராக செயல்படுகிறாரா என்றும் தெரியவில்லை.


பாஜக
ஒன்று மட்டும் லேசாக புரிகிறது.. வாக்கு வங்கி அரசியலில்தான் ரஜினி தரப்பு அதிக கவனமாக இருக்கிறது. ஜாதி, மதம் இதைத் தாண்டி புதுமையாக யோசிக்க அவர்கள் விரும்பவில்லை. காரணம் இந்த இரண்டு வாக்கு வங்கிகளை ஸ்திரப்படுத்தினால்தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதனால்தான் போராட்டத்தை பற்றி ரஜினிகாந்த் பெரிசா கவலைப்படவேயில்லை என்று இஸ்லாமியர்கள் குமுறுகின்றனர்.
 
நாராயணன்
இவ்வளவும் செய்த ரஜினிகாந்த், நேற்று ஒரே நாளில் உலமாக்களை சந்தித்துவிட்டு, சூட்டோடு சூட்டாக பாஜக நாராயணனை சந்தித்து பேசியிருக்கிறார்.. தன்னை பாஜக பிம்பம் போல் சித்தரிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இப்படி நாராயணனை கூப்பிட்டு பேசுவதை எப்படி பார்ப்பது? இன்றுவரை கபில் மிஸ்ரா பேச்சுக்கு கண்டனம் சொல்லாததை எப்படி பார்ப்பது? இது பெரும் முரண்பாடாக இருக்கிறது. பல விதமான கேள்விகளையும் எழுப்புகிறது.


குழப்பம்
உண்மையிலேயே ரஜினிகாந்த் என்ன செய்கிறார்.. மத்தியஸ்தம் செய்கிறாரா அல்லது போராட்டத்தை வாபஸ் பெற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா அல்லது தனது வாக்கு வங்கியை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளாரா..


இதை போகப் போகத்தான் புரிந்து கொள்ள முடியும். இப்படி சிஏஏ விவகாரத்தில் கடைசிவரை வீதிக்கே வராமல் ஒரு பக்கம் உலாமா மற்றொரு பக்கம் நாராயணன் என தன்னை சேஃப்டி பண்ணி கொள்வது எதற்காக என்று, ரஜினிகாந்த் அவர்கள்தான் நமக்கு விளக்க வேண்டும்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்