ஆதிதிராவிடர் விடுதிகளில் அரங்கேறும் அக்கப்போர்!

தமிழக அரசு ஆதிதிராவிட விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்த நினைத் தாலும் சில பொறுப்பற்றவர்களால் நாச மாகிக் கொண்டிருக்கிறது ஆதிதிராவிடர் நலத்துறை. 


திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் துறையின்கீழ் இயங்கும் விடுதிகள் செயலற்றுப்போய் கிடப்பதாகவும், இங்கு இத்துறைக்கு அதிகாரியாக இருந்த சிவதாசும் பெரம்பலூருக்கு மாற்றலாகி சென்று விட்டதால், தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலராக இருக்கும் காமராஜ் கூடுதல் பொறுப்பாக ஆதிதிராவிடர் நலத் துறையை கவனித்துக் கொள்கிறார். இதற்கென்று தனி அதிகாரி இல்லாததால் விடுதி வார்டன்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.


அந்த வகையில் தமிழகத்தில் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின்கீழ் 13 மேல்நிலைப் பள்ளிகளும், 14 உயர்நிலைப் பள்ளிகளும், 5 நடுநிலைப் பள்ளிகளும், 70 துவக்கப் பள்ளி களும் செயல்பட்டு வருகின்றன.


இத் துடன் பழங்குடியினர் நல உண்டு உறை விடப் பள்ளிகள் என 2 உயர் நிலைப் பள் ளிகளும், 2 நடு நிலைப் பள்ளிகளும், 1 மேல்நிலைப் பள்ளியும், 25 துவக்கப் பள்ளி களும் செயல் பட்டு வருகின்றன. - 2 ஆண்க ள், 3 பெண்கள் என 5 கல்லூரி விடுதி களும் ஒரு ஐ.டி. ஐ. விடுதியும், ஒரு முதுகலை மாண வர் விடுதியும், 28 மாணவர் விடுதியும், 26 மாணவிகள் விடுதி என மொத்தம் 49 விடுதிகள் இய ங்குகிறது.


கல்லூரியில் படிக்கும்மாணவர்களுக்கு மாத உணவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாயும், பள்ளியில் படிக்கும் மாணவர் களுக்கு மாத உணவுக் கட்டண மாக தொள்ளாயிரம் ரூபாயும் ஒதுக்கி இருக்கிறது அரசு. விடுதிகளில் காலை நேரங்களில் இட்லி, பொங்கல் வகைகளும், மதிய நேரத்திற்கு சாப்பாடு, சாம்பார், பொறியல், ரசம் அல் லது மோர் வழங்க வேண்டும்.


மாலை நேரத்தில் சுக்கு காபி அல்லது சுண்டல் வழங்கப் பட வேண்டும். இரவு நேரத்தில் சாப்பாட்டுடன் காரக் குழம்பு வழங்க வேண்டும். மாதத்தில் இரண்டு புதன் கிழமைகளில் ஒரு மாணவனுக்கு 80 கிராம் மட்டனும், 100 கிராம் சிக்கனும் வழங்க வேண்டும். மாலை 6 மணி முதல் 7.30 வரை மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.


இப்படி அர சாங்கம் நிதி வகுத்திருந் தாலும், திருச்சி மாவட் டத்தில் ஒரு விடுதிக் கூட அரசு சொன்ன விதியை கடைபிடித்த தாக தெரியவில்லை.


 தினமும் மூன்று வேளையும் தனித் தனியாக சமைத்துத் தரவேண்டும். சமைத்து வைக்கப்படும் உணவு மாதிரிகளை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.


அவற்றை உணவுத் துறையைச் சார்ந்த அதிகாரிகளோ அல்லது இத்துறையில் பணிபுரியும் மற்ற அதிகாரி களோ திடீர் ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், பெரும்பாலான விடுதிகளில் இரண்டு முறை சமைப்பதே பெரிது என்கி றார்கள் மாணவர்கள்.


விடுதிகளில் நடக்கும் அவலங்களை விலாவாரியாக மேலதிகாரிகளுக்கு புகாராக எழுதி அனுப்பினால் அந்த புகார்மீது எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. .


பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்குவதில்லை . காரணம், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் தயார் செய்யப்படுவதால் பெரும்பாலான மாணவர்கள் வெளிக் கடைகளில்தான் சாப்பிடுகின்றார்கள்.


குறிப்பாக, ஒரு விடுதியில் 50 மாணவர்கள் இருப்பதாக வருகைப் பதிவேட் டில் சொல்லப்பட்டாலும் 20 மாணவர்கள் இருப்பதே அரிதாக இருந்தபோதிலும்,அனைத்து மாணவர்களும் வந்ததாக வருகைப் பதிவேட்டில் கணக்குக் காட்டி மாதாந்திரம் வழங்கப் படும் உணவு கட்டண தொகையை பல ஆயிரங்கள் வார்டன்கள் சுருட்டி வருவதாகவும் பேசப்படுகிறது.


ஒரு விடுதியில் மாதம் மீதமாகும் உணவு பொருட் களில் ஏவலர் மற்றும் காவலர் (அட்டெண் டர்), சமையலர் மற்றும் துப்புரவு பணியாளர் என இவர்கள் பதவிக்கு ஏற்ப அரிசி மளிகை பொருட்களை பிரித்துக் கொடு த்து விடுவதால் விடுதிகளில் எது நடந்தாலும் அவற்றை வெளிச் சத்திற்கு வராமல் பார்த்துக் கொள்வார்கள்.


உணவு சிறப்பு கட்டணம் என்று பில் போட்டு வசூலிப்பது, விடுதிகளில் சிதில மடைந்த பொருட்களை சரி செய்ததாக பில் போட்டு வசூலிப்பது வாடிக்கையாக வைத்தி ருக்கும் வார்டன்கள் எந்தெந்த வழியில் ஆட்டையை போடலாம் என்று யோசித்து மாத சம்பளத்தைவிட கிம்பளத்திற்கும் ரெடி செய்து விடுவார்களாம்.


மேலும், பழங்குடியினர் நல திட்ட அலுவலராக இருக்கும் ரெங்கராஜ் என்பவர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பல திட்டங் களை செயல் படுத்தியதாக கூறி, உண்டு கொழுத்து வருகிறாராம் ரெங்கராஜ்.


துறையூர் கோட்டத்தில் உள்ள பெரும் பாலான விடுதிகள் செயல்படவே இல்லை என்று இயக்குநர் அலுவலகம் வரை புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்கின்ற குற்றச் சாட்டும் இருக்கிறது.


- இனி, திருச்சி மாவட்டத் தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஆய்வு செய்தால் திருச்சி மாவட்டத்தில் ஆதிதிரா விடர் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகள் எந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்பதை கண்டறிய முடிவதோடு, தமிழகத்தில் சிறப் பாக செயல்படும் இத்துறையின் அமைச்சராக இருக்கும் ராஜலட்சுமியும் தன் பங்கிற்கு ஆய்வு மேற்கொண்டால் பல திடுக்கிடும் (சுருட்டல்கள்) தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும் என்பது மறுக்க முடியாத உண்மை .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு