உறவினரின் இரண்டு வயது குழந்தையை கடத்திய வடமாநில இளைஞன் கைது.

சென்னை அடுத்த ஆவடியில் ஒரு லட்ச ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு உறவினரின்  இரண்டு வயது குழந்தையை கடத்திய வடமாநில இளைஞனை, செல்போன் எண்ணை கொண்டு சில மணி நேரங்களில் போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.


மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராபிஷ்யாம்-ராக்கி தம்பதியினர் ஆவடி அடுத்த, சேக்காடு பகுதியில்வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதேஷ் என்கிற இரண்டு வயது மகன் உள்ளான்.


சுற்று வட்டாரப் பகுதிகளில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வரும் ராபி ஷ்யாம் தனக்கு உதவியாக இருப்பதற்காக, சில தினங்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் மகன் ஷானிகுமார் என்பவனை வரவழைத்து தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.


இந்நிலையில் சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி ஷானிகுமார் குழந்தை ஆதேஷை தன்னுடன் அழைத்து சென்றுள்ளான்.


ஆனால், நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு வராததால், குழந்தையின் பெற்றோர் ஷானிகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.


அப்போது, தான் குழந்தையை கடத்தியுள்ளதாகவும் ஒரு லட்ச ரூபாய் பணம் அளிக்காவிட்டால் குழந்தையை விடமுடியாது எனவும் மிரட்டியுள்ளான்.


மேலும், ராபி ஷ்யாமின் ஏடிஎம் கார்ட் தன்னிடம் உள்ளதாகவும் அதன் ரகசிய எண்ணை தெரிவித்துவிட்டு, அந்த வங்கி கணக்கிலேயே பணத்தை போடுமாறும் கூறியுள்ளான்.


இதனால் பதற்றமடைந்த பெற்றோர் ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து உடனடியாக தனிப்படைகளை அமைத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார், ஷானிகுமாரின் செல்போன் சிக்னலை டிராக் செய்து அவன் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ரயிலில் சென்றதை கண்டறிந்தனர்.


தொடர்ந்து, அங்கிருந்த லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தவனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்


Popular posts
முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.
Image
சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை
Image
ஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
Image
மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் பெற வேண்டும் என்ற உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
Image
அ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்!
Image