கொரோனாவுக்கு முதல் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் இஸ்ரேலில் முதல் பலி நிகழ்ந்துள்ளது.


அந்நாட்டில், தற்போது வரை 945 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 10 பேர் ஆபத்தான நிலையிலும், இவர்களில் 15 பேர் பூரண குணமடைந்து திரும்பியதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாக கூறப்பட்ட 88வயதான ஆர்யே ஈவன் (Aryeh Even) என்ற முதியவர் ஜெருசலம் மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி உயிரிழந்தார். இவரின் உடல் உறவினர்கள் இல்லாமல், தனியார் அமைப்பினரால் அடக்கம் செய்யப்பட்டது.


பொதுவாக உயிரிழந்தவர்களின் உடல்கள் துணியால் மூடி அடக்கம் செய்யப்படுவது வழக்கம். கொரோனா அச்சம் காரணமாக முதியவரின் சடலத்தை தடிமனான பிளாஸ்டிக் கவரால் மூடிய, தனியார் அமைப்பினர் முகக்கசவம், பாதுகாப்பு உடைகள் சகிதமாக உடலை அடக்கம் செய்தனர்