கொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் அனைத்து வங்கிகளின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கே செல்லாதவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.


பொதுமக்கள் அதிகம் கூடும் வங்கி, அரசு அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இதன் காரணமாக நாளை முதல் குறிப்பிட்ட சில பணிகள் மட்டுமே அனைத்து வங்கிக் கிளைகளிலும் நடக்கும் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது.


பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது, காசோலைகள் பறிமாற்றம், கணக்கில் அல்லாது வேறு வகையான பணம் செலுத்துதல் மற்றும் அரசு சார்ந்த பரிவர்த்தனை பணிகள் மட்டுமே நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இக்கட்டான நிலையில், வங்கிகளுடன் வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது