கொரோனா அச்சத்தால் அமெரிக்க சிறைகளில் இருந்து கைதிகள் விடுதலை

கொரோனா பரவிய அச்சத்தால் அமெரிக்காவின் பல்வேறு மாகாணச் சிறைச்சாலைகளில் இருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


சிறைக்குள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் கொரோனா பரவுவதைத் தடுக்கவும் கலிபோர்னியா, நியுயார்க், ஒஹியோ, டெக்ஸாஸ் மற்றும் 12க்கும் மேற்பட்ட மாகாணங்களில் உள்ள சிறைக்கைதிகள் தண்டனைக்காலத்திற்கு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறைகளுக்குள் விருந்தினர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


சுமார் 22 லட்சம் கைதிகள் அமெரிக்க சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்றனர். அவர்களிடையே கொரோனா போன்ற கொடிய தொற்று நோய்கள் பரவக்கூடிய சூழ்நிலை இருப்பதாலும் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.