நாளை வெளியே செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை! மீறினால் சட்ட நடவடிக்கை...

ஶ்ரீலங்காவில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பல விடயங்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டுவருகின்றன.


ஶ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.


கொழும்பு கம்பஹா புத்தளம் வடமாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டு இன்று 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.


இந்நிலையில் கொழும்பு கம்பஹா புத்தளம் வடமாகாணம் போன்ற இடங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை 12 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.


இதன்மூலம் மக்கள் அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்வதற்காக 6 மணித்தியாலங்கள் நாளை வழங்கப்படவுள்ளது.


இதனால் நாளை மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக பரபரப்புடன் செயற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே கொரோனா தொற்று அதிகாமாவதற்கு காரணமாக அமையக்கூடாது என அரசாங்கத்தால் மக்களுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.


அதில் நாளை மக்கள் வெளியில் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவையாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள்...


தேவையான விடயத்தின் அடிப்படையில் மாத்திரம் பொதுப்போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல்
எல்லா சந்தர்ப்பத்திலும் இரண்டு நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை கடைப்பிடித்தல்.
அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நீங்கள் வீட்டிலிருந்து வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம் செல்ல வேண்டும்.


வீட்டில் ஒரு நபர் மாத்திரம் வர்த்தக நிலையத்திற்கு செல்வதை வரையறுக்கவும்.


தனியார் வைத்திய ஆலோசனைகளை கடைப்பிடிக்கவும்
வயோதிப நபர்களை வீட்டிலேயே தங்க வைக்கவும்.


பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தில் நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை பேணுங்கள்.


பொருட்களை கொள்வனவு செய்யும் பொளுது வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தை வரையறை செய்யுங்கள்.


இந்த வர்த்தக நிலையங்களுள் கூடுதலானோர் உட்பிரவேசிப்பதில் கட்டுப்படுத்துவதில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முகாமையாளர் பாதுகாப்பு பிரிவினர் கவனம் செலுத்த வேண்டும்.


வெளியிடங்களுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும்போது வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை மாத்திரம் கடைப்பிடித்து வீடுகளுள் பிரவேசிக்க வேண்டும்.


அனைத்து விடயங்களையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியாமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன் நாளைய தினம் காலை 6 மணிக்கே வர்த்தக நிலையங்களை திறக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.