மண்டபத்திற்குள் வருவதற்கு முன்னால் கைகழுவக் கிருமி நாசினி

 நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு கிருமிநாசினி கொடுத்து கைகளைக் கழுவ செய்தபின் மண்டபத்திற்குள்ளே அனுப்பிய நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் பாதிப்பு தமிழகத்திலும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக முக்கிய நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், திருமண விழாக்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.


இருப்பினும் முன்பே திட்டமிடப்பட்டிருந்த திருமணம் போன்ற விழாக்கள் மட்டும் தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது நடைபெற்று வருகிறது.அந்த வகையில் புதுக்கோட்டை கலிப் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், ஆட்டோ ஓட்டுநர் அன்வர் என்பவர் தனது மகளின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.


இந்த விழாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபத்திற்கு முன்னால் தண்ணீர் குழாய்களும், கிருமி நாசினி பாட்டில்களும் வைக்கப்பட்டன. திருமண விழாவில் கலந்துக் கொள்ள வந்த விருந்தினர்கள் கிருமி நாசினிகளை கொண்டு கைகழுவிய பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.


இதேபோல் நிச்சயதார்த்த விழாவிற்கு வந்த மணமகனும் திருமண மண்டபத்திற்கு வெளியே கையைக் கழுவிய பின்னரே உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.


இதனைத்தொடர்ந்து நிச்சயதார்த்த விழா முடிந்த பின்னரும் விருந்தினர்கள் கைகழுவிய பின்னர் மண்டபத்தை விட்டு வெளியேறினர். மணமகள் வீட்டாரின் இந்தச் செயல் அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)