சட்டப்பேரவை வாயில் தரையில் அமர்ந்து தமிமுன் அன்சாரி தர்ணா..

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுக்கும் தமிழக அரசைக்கண்டித்து மனிதநேய ஜனாநாயகக் கட்சித்தலைவர் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வாயில் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏஏ, மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடியுரிமை பதிவேடு(என்ஆர்சி) ஆகிய சட்டங்கள் குறித்து சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தமிழகத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. சிஏஏ, என்பிஆருக்கு எதிராக பல மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றினாலும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கைக்கு அசைந்துக்கொடுக்கவில்லை.


கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலும் தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இம்முறையும் மானியக்கோரிக்கை மீதான் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து விவாதம் நடத்தக்கோரியும் அரசு ஒப்புக்கொள்ளவில்லை.


இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்து அது ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்புச் செய்தது. மனிதநேய ஜனநாயக கட்சித்தலைவர் தமிமுன் அன்சாரி வெளிநடப்புச் செய்தப்பின் சட்டப்பேரவைக்கு வெளியே கையில் கோரிக்கை பதாகை ஏந்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


அவரை எழுந்துச்செல்லும்படி காவலர்கள் வைத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்தார். சிறிது நேரம் கழித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியும் அவருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததை அடுத்து அவர் கிளம்பிச்சென்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு