சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேட்டி

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவு  செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்
2010-ம் ஆண்டில் இடம்பெற்ற கேள்விகள் மட்டும்தான் தற்போது
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம்பெறும் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற
சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேட்டி


சென்னை, மார்ச். 06-
2010-ம் ஆண்டில் இடம் பெற்ற கேள்விகள் மட்டும்தான் தற்போது
மக்கள் தொகை கணக் கெடு ப்பில் இடம்பெறும் என சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்  என்று சென்னை பத்திரிகையாளர்  மன்றத்தில்


இன்று (06-03-2020) வெள்ளிக் கிழமை
காலை  11 மணி அளவில் நடை பெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி அளித்தார்.


அப்போது அவர் மேலும் கூறியதாவது:-ஊடக நண்பர்கள் அனை வருக்கும் எனது நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆம் ஆத்மி கட்சியில் இருந்த போது பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் தரக்குறைவாக விமர்சித்து வந்த கபில் மிஸ்ரா தற்போது பா.ஜ.க. ஆட்சியில் இணைந்த பிறகு ஆம் ஆத்மி கட்சியையும், முஸ்லிம்களையும் வசைபாடி வருகிறார்.
டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதிகளில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிக் குட்பட்ட 26 இடங்களில் பிப்ரவரி 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் கலவரங்கள் நடைபெற்றன.


இதற்கு என்ன காரணம்  என்றால் தமிழகத்தில் வண் ணாரப் பேட்டை, டெல்லி ஷாஹின்பாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சி.ஏ.ஏ. மற்றும் என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகிய சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டங்களை போல அங்கு ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைதியாக போராடி வந்த மக்களை மூன்று நாட்களில் அகற்றாவிட்டால் சரியான பாடம் கற்பிப்போம் என்று கபில் மிஸ்ரா மிரட்டல்  விடுத்தார்.


அதனால் ஏற்பட்ட விளைவு 23-ந்தேதி காலையில் நடைபெற்ற குடியுரிமை ஆதரவு ஆர்ப்பாட்டத்தை யொட்டி அன்று இரவு கலவரம் ஏற்பட்டது.  இந்த கலவரத்தில் இதுவரை 53 பேர் இறந்திருக்கிறார்கள். இறந்தவர் களில் 8 பேர் அடையாளம் காணப் படவில்லை.  400-க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் கவலைக் கிடமான நிலையில் இருக் கின்றனர்.  122 வீடுகள், 322 கடைகள் எரிக்கப்பட்டு சூறையாடப் பட்டிருக்கிறது.


டெல்லி வன்முறை - இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் நேரில் ஆய்வு


இந்தியத் தலைநகர் டெல்லியில் - குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நிகழ்த்த ப்பட்ட திட்ட மிடப்பட்ட வன்முறை - கலவரத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளோம்.
நிதி திரட்டும் வேலை - 11 பேர் குழு
பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்காக - இந்தியா முழுவதும் நிதி திரட்டும் வேலையைத் துவக்கிச் செய்து வந்து கொண்டிருக்கிறோம்.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப் புகளைக் கணக்கி டுவதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 11 பேர் கொண்ட குழுவை நியமித் திருக்கிறோம். அவர்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று கணக்கிட்டு அறிக்கை சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.


முதற்கட்டமாக உணவுப்பொருட்கள்


முதற்கட்டமாக, பாதிக்க ப்பட்ட குடும்பங்களுக்கு லாரி மூலம் உணவுப் பொருட்களை வழங்கி இருக்கிறோம். நாங்கள் மட்டுமின்றி, அரசு சாரா மக்கள் நல அமைப்புகள் பலவும் உதவிக் கொண்டிருக்கின்றன.


டெல்லி ஈத்கா மைதானத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட அனைவரையும் தங்க வைத்துள்ளனர். அங்கிருப்பவர்களை அரசு மூலம் கணக்கெடுத்து, உரிய நிவாரணங்களைப் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொண்டு ள்ளோம்.


மதவெறி தூண்டப் பட்டாலும் மத நல்லிணக்கமும் தழைத்துக்கொண்டு தான் இருக்கிறது


இறந்து போன, படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களைக் கணக்கெடுத்தோம். இதுவரை 37 பேர் இறந்துள்ளதாகக் கணக் கெடுத்துள்ளோம்.


இந்த 37 பேர் சார்ந்த பத்து குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கி யிருக்கிறோம். அவர்களுள் இரண்டு குடும் பத்தினர் முஸ்லி மல்லாதவர்கள் என்பது மட்டுமல்ல. கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் களைக் காப்பாற்ற வந்தவர்கள். ஒருபுறம் மதவெறி தூண்டப்பட்டுக் கொண் டிருந்தாலும், மறுபுறம் மதநல்லிணக்கமும் இந்த நாட்டில் தழைத்தோங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தியா முழுக்கவும் பல நிகழ்வுகள் நடைபபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.


இப்பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நாடி உள்துறை அமைச்சரைச் சந்திக்க முயற்சித்தோம். அது நடக்க வில்லை.
பாதிப்பு என்று வரும் போது முதலில்rescue, relief, restoration, rehabilitation  என அடுத்தடுத்து செய்யப்பட வேண்டும். இப்போது relief  எனும் நிவாரணப் பணிதான் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.


மைனாரிட்டி கமிஷன் முஸ்லிம் வீடுகளை மட்டும் குறிவைத்துத் தாக்கியிருப்பதாக மைனாரிட்டி கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது. அதற்காக இப்போது யாரையும் பழி போட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. இப் போதைய உடனடித் தேவை பாதிக்கப்பட்ட குடும்ப ங்களுக்கு அத்தியாவசிய உதவிகள். அவற்றை எங்களாலியன்ற அளவுக்குச் செய்து கொண்டி ருக்கிறோம். இறந்த ஒவ்வொருவரின் குடும்ப த்திற்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை கொடுத் திருக்கிறோம்.


இது ஒன்றும் பெரிய உதவி இல்லை. அவர்கள் அடைந்துள்ள பாதிப்பு மிகப் பெரியது. நாங்கள் செய்வது ஏதோ அவர்களை ஓரளவுக்கு ஆறுதல் படுத்தும். அவ்வளவுதான்.


சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்


பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் வறியவர்களும், அன்றாடங் காய்ச்சிகளும், நடுத்தர வர்க்கத்தினரும்தான். அநியாயமாக அவர்களது தெருக்களுக்குள் புகுந்து தீ வைத்துக் கொளுத்தி, பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஏன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இது மிகக் கொடுமையான விஷயம்.


இதுவரை 1984இல் சீக்கியர் களுக்கு எதிராக நடந்த, ராஜீவ் காந்தி கொலையின்போது நடந்த நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் இந்தக் கலவரம் அமைந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் வெளியிருந்து


கொண்டுவரப்பட்டவர்களே தவிர உள்ளூர்வாசிகள் யாரும் கிடையாது.
பாதிக்கப்பட்ட முஸ்லிம் களுக்குக் கோயில்களில் பாதுகாப்பு - இது தான் இந்தியாவின்  சமய நல்லிணக்கம்
பாதிக்கப்பட்ட முஸ்லிம் களுக்குக் கோயில்களில் பாதுகாப்பு வழங்கிக் கொண்டி ருந்தார்கள்.


இதுதான் இந்தி யாவின் சமய நல்லி ணக்கம். இதுதான் இந்த நாட்டில் தழைத்தோங்க வேண்டும். ஆனால், மதவெறியைத் தூண்டி, மனிதாபிமானத்தைக் கொலை செய்து, இந்தியாவின் மகத்தான ஒற்றுமையைக் கெடுக்கும் பணியைச் சமூக விரோதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.


நாம் இந்தியர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம்


முதலில் நாம் மனிதர்கள். பிறகுதான் முஸ்லிம், இந்து, கிறிஸ்துவன் என்பதெல்லாம். ஆக, நாம் மனிதர்கள் - அதுவும் இந்தியர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். வெளிநாடு சென்றால், "நீங்கள் இந்தியாவிலிருந்து வந்தவரா?" என்றுதான் கேட்பார்களே தவிர முஸ்லிமா, இந்துவா என்று கேட்க மாட்டார்கள்.


குடியுரிமைத் திருத்தச் சட்டம் - மக்களிடம் பீதி


குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து நாங்கள் பெரிதாகச் சொல்ல எதுவு மில்லை. அதிலுள்ள குழப்பங்கள் அனைத்தையும் நீங்கள் நன்றாக அறிந்துதான் இருக்கிறீர்கள்.


இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் இந்த நாட்டு மக்களிடையே அச்சமும், பீதியும், பதட்டமும் பெருமளவில் நிறைந்துள்ளது. அதன் காரணமாகவே அவர்கள் தன்னெழுச்சியுடன் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் முஸ்லிம் லீகோ, காங்கிரஸோ, வேறு கட்சிகளோ கிடையாது. ஆளும் பாஜகதான்.


இந்த நாட்டை ஆளும் அரசு, நாட்டு மக்களுக்காக நிறை வேற்றியுள்ள குடியுரி மைத் திருத்தச் சட்டத்தில் - குடியுரிமை பெறு பவர்களில் 6 சமுதாயங்களைக் மட்டும் குறிப்பிட்டு முஸ்லிம் சமுதாயத்தை மட்டும் தவிர்த் திருக்கிறார்கள். 3 நாடுகளையும் மட்டும் குறிப்பிட்டு, இதர நாடு களைத் தவிர்த்திரு க்கிறார்கள். மதச்சார்பற்ற இந்த நாட்டில் இப்படியொரு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது சர்வதேச நாடுகளில் கேள்வியை எழுப்பியிருக்கிறது.


அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது


"இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது... 72 ஆண்டு கால வரலாற்று நடைமுறைக்கு முற்றிலும் மாற்றமானது... அரசியல் சாசன சட்டத்தை ஏன் மாற்றத் துணிகிறீர்கள்?"" என்று மட்டுமே இந்திய மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். வீதிக்குச் சென்று போராட யாரும் யாரையும் தூண்ட வில்லை. மக்களாக முன்வந்து செய்து கொண்டிருக் கிறார்கள். ஒருபுறம் இதுபோன்ற போராட்டங்களில் எழுப்பப் படும் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உரிய தீர்வைத் தர வேண்டிய நிலையில் அரசு இருக்க, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே நாட்டு மக்களது உணர்ச்சிகளை இன்னும் தூண்டும் வகையில் பேசிக் கொண்டிருப்பது வரவேற்கத் தக்கதல்ல.


பொன். ராதாகிருஷ்ணன் - ஒற்றுமையை சிதைக்கும் பேச்சு


நேற்று திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள், இந்திய அரசியல் சாசன சட்டத்தொகுப் பிலிருந்து secular - மதச்சார்பற்ற நாடு என்ற சொல்லையே எடுத்து விட வேண்டும்"" என்று கூறியி ருக்கிறார். ஊடகங்களில் நீங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் மூலமாகவே இதை நாங்கள் தெரிந்து கொண்டோம். இந்தப் பேச்சுகள் இந்திய மக்களிடையே ஒற்றுமையை விதைக்குமா அல்லது இருக்கும் ஒற்றுமையைச் சிதைக்குமா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.


என்.ஆர்.சி. இந்தியா முழுமைக்கும் என்று 13 இடங்களில் கூறியிருக்கிறார் அமித்ஷா


NRC அஸ்ஸாமுக்கு மட்டு மானது. அதை இந்தியா முழுக்கவும் நடைமுறைப் படுத்துவோம் என இந்திய உள்துறை அமைச்சர் பொறுப் பிலிருக்கும் அமித்ஷா அவர்கள் பாராளு மன்றத் திலும், ஜார்க்கண்ட் தேர்தலின் போதும், அஸ்ஸாமில் நடைபெற்ற கூட்டங் களிலும் என 13 இடங்களில் கூறியிருக்கிறார். இதையும் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளைக் கணக் கிட்டுத்தான் நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம். அஸ் ஸாமில் NRC  அடிப் படையில் கணக் கெடுத்து 19 லட்சம் பேர் குடியுரிமை யற்றவர்கள் என்று ஆக்கப் பட்டுள்ளனர். அது தொடர் பாக அங்கு நிறைய கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளன.


முதல் எதிர்ப்பு அசாமிலிருந்து தான்


CAA எனும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறை வேற்றப்பட்ட பிறகு முதல் எதிர்ப்பு அஸ்ஸாமி லிருந்து தான் எழுந்தது. இந்தச் சட்டம் மூலம் அந்த 19 லட்சம் பேருள் இந்துக்களான 12 லட்சம் பேருக்குக் குடியுரிமை வழங்கப் படவுள்ளது. எஞ்சியவர்களாக இருக்கும் முஸ்லிம்கள் குடியுரிமையற்றவாகளாக ஆக்கப்படுகிறார்கள். இதைக் கருத்திற்கொண்டுதான் - அதைத் தம் மாநிலத்தில் நடைமுறைப் படுத்த மாட்டோம் என அஸ்ஸாம் முதல்வரே கூறியிருக்கிறார்.


ஒன்றை மறைக்க இன்னொன்று என பல குழப்பங்கள்


ஒரு மாநிலத்திற்குள் நுழை வதற்குக் கூட interline permit வாங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவை எங்கு கொண்டுபோய் விடும் என்று எமக்குப் புரியவில்லை. இவர்கள் கொண்டு வரும் மசோதாக்கள், நிறைவேற்றும் சட்டங்கள் என அனைத்துமே பெருங்குழப்பங்களைக் கொண்டிருக்கிறது. இதுவரை இருந்த எந்த அரசாங்கமும் இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்தியதில்லை. ஒன்றை மறைக்க இன்னொன்று என பல குழப்பங்களைத் தொடர்ந்து செய்து கொண்டி ருக்கிறார்கள். அப்படி அண்மையில் எழுந்துள்ள பெருங்குழப்பம் என்பது இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகானதாகும்.


13 மாநிலங்களில் தீர்மானம்


இதன் பின் விளைவுகளை நன்குணர்ந்த காரணத் தால்தான் இந்தியாவின் சுமார் 13 மாநிலங்களில் அவற்றின் சட்ட மன்றங் களிலேயே இச்சட் டத்தை எதிர்த்துத் தீர்மானம் இயற்றியிரு க்கிறார்கள். இன்னும் பல மாநிலங்களிலும் நிறைவேற்றப்படும் சூழல் உள்ளது. தமிழகத்தில் NRC எதிர்த்து தீர்மானம் இயற்றா விட்டாலும், இந்த NPRஇல் உள்ள குழப்பங்களையாவது நீக்கக் கோரலாம். தேவையற்ற கேள்விகளை யெல்லாம் கேட்காமல் தவிர்க்கவாவது கோரலாம். ஆளும் அரசு மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு இந்தக் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, சரியான நடவடிக் கையை மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்.


பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைகேட்பது ஏன் என்பது தான் கேள்வி


அஸ்ஸாமைச் சுற்றி நதிகள் ஓடுகின்றன. வெள்ளம் வந்தால் அனைத்தும் அழியும். அப்படி அந்த மாநிலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில் நாங்களே கூட 56 லட்சம் ரூபாயைக் கொடுத் திருக்கிறோம். ஆக, வெள்ளப் பாதிப்பு வந்தால் ஆவணங்கள் இருக்காது. அழிந்துபோகும். அப்படி யிருக்க, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எனும் பெயரில் இதுவரை இருந்த கேள்விகளோடு கூடுதலாக பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவண ங்களையெல்லாம் கேட்பது ஏன் என்பதே இப் போதைய கேள்வியாக இருக்கிறது.
CAA, NRC, NPR  என்பன வெவ்வேறானவை. 2010இல்National Population Census - NPC  என்ற பெயரில் தான் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. அந்தக் கணக் கெடுப்பில் என்னெ ன்ன கேள்விகள் கேட்கப் பட்ட னவோ அவையே மீண்டும் கேட்கப்பட்டால் எந்தப் பிரச்சினையும் இருக் காது. அப்படிச் செய்யாத வரை குழப்பங்கள் நீடிக்கத்தான் செய்யும். அக்குழப்பங்கள் காரணமாக அவரவர் தன்னெழுச்சியாகப் போராடிக் கொண்டுதான் இருப்பர். அரசு செய்யும் குழப்பம் ஒரு புறம் என்றால், எதிர்ப்புக் கூட்டங்களில் பேசுவோர் உணர்ச்சிகளைத் தூண்டி ஏற்படுத்தும் குழப்பம் இன்னொரு புறம் சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டிரு க்கின்றன. மொத்தத்தில் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றால் இந்தக் குழப்பங் களுக்கு வேலையே இருக்காது.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நிறைய பணிகளைச் செய்து கொண்டி ருக்கிறோம். இந்தியத் தலைநகர் டில்லியில் 50 முதல் 60 கோடி ரூபாய் செலவு மதிப்பில், Qaidemillath Muhammed Ismail Memorial Centre for Humanity  என்ற பெயரில் அலுவலகத்தை நிரந்தரமாக அமைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம்.


உத்தரப்பிரதேசம்


குடியுரிமைத் திருத்தச் சட்ட த்திற்கு எதிராகப் போராடிய மக்கள் 27 பேரை உத்தரப் பிரதேசத்தில் காவலர்களே சுட்டுக் கொன்றிருக் கிறார்கள். அங்குள்ள முஸ்லிம்கள் முக்கிய வீதிக்கு வந்து போராட வில்லை. பொதுமக்களுக்கு இடைஞ்சல் எதுவும் தரவில்லை. தத்தம் பகுதிகளில் இருந்த நிலையிலேயே இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. போராட்டம் பெரிய அளவில் விரிவடையக் கூடாது என்பதற்காக மக்களை அச்சப் படுத்தவே இப்படிச் செய்திருக்கிறார்கள். அங்கும் பாதிக்கப்பட்ட குடும்பங் களைச் சந்தித்தோம். மங்களூரில் இரண்டு பேர் சுடப்பட்டு இறந்துள்ளனர். அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை திரட்டிக் கொடுத் துள்ளோம். மீரட்டில் 23 பேர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். அவர்களுள் 10 பேரது குடும்பத்திற்கு நிதி அளித்துள்ளோம்.


நிவாரணப்பணிகளுக்காக கவுகாத்தியில் தனி அலுவலகம்


நாங்கள் சென்ற இடங்களில் எங்கள் கட்சியின் கிளைகள் கிடையாது. இருந்தும் அஸ்ஸாமில் ஊடக நண்பர்கள்,"இந்த இடங்களில் சேவை என்ற பெயரில் உங்கள் கட்சியை வளர்க்க வந்துள்ளீர்களா?"" என்றெல் லாம் கூட கேள்விகளைக் கேட்டனர். "சமுதாய மக்கள் பாதிக்கப் பட்டிரு க்கிறார்கள்... அவர்களுக்கு உதவுவது ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இங்கு வந்திருக் கிறோம்..." என்று கூறினோம். நிவாரணப் பணிகளுக் காக கவுஹாத்தியில் தனி அலு வலகமே திறந்து, அதன் மூலம் முஸ்லிம்களுக்கு மட்டு மின்றி, அனைத்து சமுதாய மக்க ளுக்கும் சட்ட உதவி களைச் செய்துகொண்டி ருக்கிறோம்.


1948 மார்ச் 10-ல் தொடங்கப்பட்ட இ.யூ. முஸ்லிம் லீக்


1947இல் இந்தியா விடுதலை பெற்றதும் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. அத்தருணத்தில் இந்தியாவிலேயே இருக்க விரும்பிய முஸ்லிம் சமுதாய மக்கள் நாதியற்ற நிலையில் விடப்பட் டிருந்தார்கள். அவர் களுக்குச் சரியான அரசியல் பாதுகாப்பை வழங்கிடு வதற்காக, 1948 மார்ச் 10 அன்று காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சென்னை ராஜாஜி அரங்கில் துவக்கினார். இது 72 ஆண்டுகள் நிறைவடைந்து, 73ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது இந்த வரலாற்றுப் பேரியக்கம். இதையொட்டி, எல்லாப் பகுதிகளிலும் எம் கட்சியின் பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி, இந்திய அரசியல் சாசன சட்டத்தைப் பாது காக்கவும், இந்திய இறை யாண்மை, மதச்சார் பின்மை ஆகியவற்றைப் பாதுகாக்கவும், இந்நாட்டில் சமய நல்லி ணக்கம், சகோதர வாஞ்சை தழைத் தோங்கவும் - இந்திய அரசியல் சாசன சட்டத்தில் உள்ளபடி உறுதிமொழி எடுக்க விருக்கிறோம்.
இவற்றைச் சொல்லத்தான் நாங்கள் உங்களை அழைத் தோம். வந்துள்ளீர்கள். கூறி விட்டேன்.


கேள்வி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டம் குறித்த உங்கள் கருத்தென்ன?


பதில்: வண்ணாரப் பேட்டை உட்பட எங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் வழிகாட்டி எந்தப் போராட்டமும் நடக்கவி ல்லை. டெல்லி ஷாஹின்பாக் ஒதுக்குப்புறமான இடம். அங்கு நடந்த போராட்டத்தையே அரசு இயந்திரங்கள் கலவர மாக்கி விட்டன. அப்படியிருக்க - அதைப் பின்பற்றி, இந்தியா முழுவதும் பல இடங்களில் ஷாஹின்பாக் எனும் பெயரை வைத்துக் கொண்டு போராடிக் கொண்டி ருக்கிறார்கள்.


எதிர்ப்பை வெளிப்படுத்த எல்லோருக்கும் உரிமை உண்டு


எதிர்ப்பை வெளிப்படுத்த எல்லோருக்கும் உரிமை உண்டு. 08ஆம் வகுப்புக்கு அரசுப் பொதுத் தேர்வு என்றார்கள். ஏன் எல்லோரும் எதிர்த்துப் போராடினர்? சட்டத்தைத் திணிக்கும்போது எதிர்ப்பது என்பது ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உள்ள உரிமை. ஆனால், அப்படிச் செய்யு ம்போது முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதுபோல, அனுமதி கோரும்போது - அதில் எத்தனை பேர் கூடினாலும் உரிய பாதுகாப்பை வழங்கி அனுமதியளிக்க வேண்டும். நடத்தும் போராட்டங்களால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், போராடவே கூடாது என்று இந்த ஜனநாயக நாட்டில் யாரையும் யாரும் கூறிவிட முடியாது. தவிர, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட போராட் டங்களில் ஈடுபட்டவர்கள் என எட்டாயிரம், பத்தாயிரம் பேர் மீதெல்லாம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
மொத்தத்தில் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் CAA, NRC, NPR  என்பன தொடர்பாக இந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியும், அச்சமும் நிலவுகிறது. இச்சட்டத்தின் மூலமாக முஸ்லிம்கள் அத்தனை பேரையும் நாட்டை விட்டும் வெளி யேற்றப் போகிறார்கள் என்று பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அச்சத்தைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் உள்ளது. அதை அவர்கள் செய்து விட்டால் இத்தனைப் பிரச்சினை களுக்கும், போராட் டங் களுக்கும், இழப்புகளுக்கும் அவசியமே இருக்காது.


பத்திரிகையாளர்களின் மற்றொரு கேள்விக்கு பதிலளிக் கையில் பேராசிரியர் கூறியதாவது:-
வரும் 9-ந்தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பீகார், ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களில் போடப் பட்டுள்ள தீர்மானங் களை யொட்டி சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர். சட்டங்கள் நடை முறைப் படுத்த தேவையில்லை. தமிழ்நாட்டில் நடக்கிற கணக்கெடுப்பு நேஷனல் பாபுலேஷன் சென்செஸ் 2010-ல் என்ன மாதிரி அமல்படுத்தி னார்களோ அதைமட்டும் அமல்படுத்துவோம் என சொன்னால் தமிழக மக்கள் திருப்தி யடைவார்கள். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைத்து விடும். இதனை அரசாங்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.


இப்பேட்டியின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில செயலாளர்கள் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.கே.பிலால் ஹுசேன், தென்சென்னை மாவட்டத் தலைவர் பூவை எம்.எஸ்.முஸ்தபா, மாவட்டச் செயலாளர் மடுவை எஸ்.பி. முஹம்மது, மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர்கள் சேப்பாக்கம் ஆலம்கான், முதஸ்ஸிர் காலித், முஸ்லிம் யூத் லீக் மாநில பொதுச் செயலாளர் புரவை அன்சாரி மதார், இந்திய யூனியன் விமன்ஸ் லீக் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஆயிஷா, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மண்ணடி ஏ.ஹெச். முஹம்மது இஸ்மாயில், ராயபுரம் காதர்ஷா. ஏ.கே.முஹம்மது ரபீ, நீப்பத்துறை சித்திக், வில்லிவாக்கம் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு