சென்னையில் போலி கால்சென்டர் மோசடி..

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்கள் பணத்தை மோசடி செய்த வழக்கில், கேளிக்கை விடுதி உரிமையாளர் பென்ஸ் சரவணன் கைது செய்யப்பட்டார்.


தமிழ்நாடு மதுபானம் மற்றும் கேளிக்கை விடுதி சங்கத்தின் தலைவரான பென்ஸ் சரவணன் கடந்த 2018-ல் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் சென்னை அண்ணா சாலையில் செயல்படும் பிரபல கேளிக்கை விடுதியான பென்ஸ் வெக்கேஷன் கிளப் உரிமையாளராகவும் இருந்து வருகிறார்.


சென்னையில் மேலும் 5 இடங்களில் கிளப் நடத்தி வரும் இவரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


தனது கிளப்பின் ஒரு பகுதியில் போலி கால் சென்டர் ஒன்று செயல்பட அனுமதியளித்ததாகவும், அதல் பணியமர்த்தப்பட்ட பெண் டெலிகாலர்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் தனி நபர் வங்கி கடன் கிடைக்கும் என பேசி அவர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.


இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பென்ஸ் சரவணன் மற்றும் போலி டெலிகாலர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த மோசடியில் தலைறைவாக உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்