தென்காசி பேருந்து நிலையத்தின் நிலை... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...

தென்காசி சமீபத்தில் நமது முதல்வர் அவர்களால் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது இந்த மாவட்டத்தில் தான் குற்றாலம் மிகப்பெரிய சுற்றுலா தலம் உள்ளது அதுபோல் பதினேழாம் நூற்றாண்டில் பிளவுபட்ட காசி விஸ்வநாதர் கோவில் சிவந்தி ஆதித்தனாரால் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் வானளாவிய கோபுரம் உள்ள து.


மேலும் இந்த பகுதியில் தென்காசி போக்குவரத்து இரவுபகல் நடப்பதால் பெரிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது இவ்வளவு உள்ள பேருந்து நிலையம் பாதுகாப்பானதா என்றால் இல்லை என்கிறார்கள் அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் ஏன் என்று கேட்டால் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது


இங்கு பழைய புதிய என இரு பேருந்து நிலையம் இருக்கிறது புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் கிடையாது இரவானால் இப்பகுதியில் உள்ளவர்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகிறார்கள் ஆட்டோ சைக்கிள் ஸ்டாண்டு எல்லாம் பழைய மரக்கட்டை போடும் இடமாக மாறிவிட்டது.


மேலும் இங்குள்ள ஹோட்டல்கள் தங்களது கழிவுகளை கழிவு நீர் செல்லும் வாருகாலில் கொட்டி பன்றிகள் நடமாடும் இடமாக மாற்றி விடுகிறார்கள் மேலும் இரவில் திருநங்கைகள் பொது கழிப்பிடத்தின் பின்பக்கம் வரும் ஆண் பெண்களை தவறாக நடக்க அழைக்கிறார்கள் இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் மாறிவிட்டது இதனால் இரவு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வருவதே இல்லை.


மேலும் இங்கு கட்டப்பட்ட கடைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது எங்களுக்கே பயமாக இருக்கு என்கிறார்கள். அங்கே கடை நடத்துபவர்கள் இதை யெல்லாம் தென்காசி நகராட்சி நடவடிக்கை எடுக்குமா என்று பொதுமக்கள் கடை வைத்துள்ளவர்கள் கேட்கிறார்கள்.


இந்தப் பகுதியில் வெளிவட்ட சாலை கொண்டுவந்தால் தென்காசி ஊருக்குள் செல்லும் கனகர வாகனம் வெளியே நெல்லை, கேரளம் போன்ற ஊர்களுக்கு தங்குதடையின்றி செல்ல முடியும்.


சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டலாம். இப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதி என்பதாலும் இந்தப் பகுதியில் சிறு வெங்காயம், நெல், கரும்பு, வாழை, தென்னை அதிகம் இருப்பதால் குளிர்பதனக் கிடங்கு தேவை என்கிறார்கள்.


இப்பகுதியில் ஆளுங்கட்சி மீது வெறுப்பு கிடையாது. எனவே இங்கு ஆளுங்கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.


போக்குவரத்து கழகங்கள் மக்களுக்கா? ஊழியர்களுக்கா?


கடந்த மாதம் 18 ஆம் தேதி தென்காசியில் இருந்து அரசு பேருந்து மதுரையை நோக்கி வந்தது. இடையில் ராஜபாளையத்தில் சிறிது நேரம் நின்று சுமார் 5.30 மணி இருக்கும். பத்து பதினைந்து பயணிகளோடு கிளம்பிய பேருந்து டைம் கீப்பர் மற்றும் சில டிரைவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.


ஏன் என்று டிரைவர் கேட்க வந்தவுடனே போவீங்களா மற்ற பஸ் நிற்கிறது என்று கூறி கண்டக்டரின் ரெக்கார்டை பிடிங்கி வைத்து கொண்டார் அந்த நேரக் காப்பாளர். _ அப்போது கிளம்பிய பஸ் நிறுத்தப்பட்டது அதில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.


இதனால் பயணிகள் அரசை குறை கூறி வேறு பேருந்தில் சென்றதை பார்க்க முடிந்தது. இதுகுறிந்து நமது நிருபர் விசாரித்தபோது அவர்கள் தங்களது பெயர்களைக் கூட சொல்ல மறுத்துவிட்டனர்.


அப்போது அந்த பேருந்து ஓட்டுனர், நடத்துனர், மற்றும் நேரக்காப்பாளர் உட்பட எவரும் பேட்ஜ் கூட அணியவில்லை. இதுபோன்ற சமயங்களில் மக்கள் படும் துயரம் அளவற்றது. இவற்றை கவனிக்குமா போக்குவரத்துத் துறை.