உள்துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பிய வாழ்த்துக் கடிதம்!' - புதிய உற்சாகத்தில் திவாகரன்

சசிகலா தம்பி திவகாரன் மகன் ஜெயானந்த் திருமணத்துக்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் திவாகரன். இது அ.தி.மு.க மற்றும் தினகரன் தரப்பிலும் கவனிக்கப்படும் விஷயமாகியுள்ளது.


மணமக்களுடன் திவாகரன்
மணமக்களுடன் திவாகரன்
மன்னார்குடியில் உள்ள சுந்தரக்கோட்டையில் கடந்த 5-ம் தேதி சசிகலா தம்பி திவாகரன் மகன் ஜெயானந்த், சசிகலா அக்கா மகன் பாஸ்கரன் மகள் ஜெயஸ்ரீ திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


தன்ஒரே மகன் திருமணதந்துக்காக தடபுடல் ஏற்பாடுகளைச் செய்த திவாகரன் தமிழகம் மட்டுமல்லாது டெல்லியில் உள்ள பல முக்கிய பிரபலங்களுக்கும் குறிப்பாக பி.ஜே.பி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்.இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஜெயானந்தை வாழ்த்தி உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். திருமண பயணத்தைத் தாங்கள் ஆரம்பிக்கும் தருணத்தில் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அளவில்லா ஆசை எனக்கு இருந்தாலும் தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.


ஆகையால், இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஜெயானந்த் தம்பதிக்கு என் உளப்பூர்வமான வாழ்த்துகள் என இந்தி மொழியில் எழுதப்பட்டு திவகாரன் பெயருக்கு அனுப்பியிருக்கிறார்.இந்த வாழ்த்துக் கடிதம் திவாகரன் அவரின் மகன் ஜெயானந்த் ஆகியோரை கடும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க மற்றும் டி.டி.வி.தினகரனை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சிலரிடம் பேசினோம், தினகரனுடன் ஏற்பட்ட மோதலால் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியபோதே இது தற்காலிகமானதுதான். அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து கிடப்பவர்களை ஒன்றிணைப்பதே என் நோக்கம். அதை நோக்கியே என் பயணம் இருக்கும் என்றார்.


இதைச் செயல்படுத்தும் விதமான செயல்களிலும் ஈடுபட்டார் திவாகரன். அதே நேரத்தில் ஜெயானந்த் அடிக்கடி டெல்லியில் முகாமிட்டதுடன் பி.ஜே.பி தலைவர்களைச் சந்தித்துப் பேசியதால் அவர்களுக்கு நெருக்கமான நபராக ஜெயானந்த் மாறினார்.


அந்தப் பழக்கத்திலேயே ஒரு முறை மோடியின் தம்பி பிரகலாத பாய் மோடி தமிழகம் வந்தபோது அவரைச் சந்தித்த ஒரு சில நபர்களில் ஜெயனாந்தும் ஒருவர். அதே போல் அமித்ஷா மற்றும் மோடியின் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரையும் சந்தித்து பேசியிருக்கிறார். டெல்லியில் உள்ள பி.ஜே.பி-யின் முக்கிய பிரமுகர்கள் ஜெயானந்தை இளம் புயல் என்றே அழைப்பார்கள்.


இந்தத் தொடர்பை வைத்தே சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சியும் நடந்தது. இதற்கிடையில் திருமணம் நடந்து முடிந்தது. இதில் டெல்லி பி.ஜே.பி-யைச் சேர்ந்த பலர் போன் மூலமாக வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அமித் ஷா வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், திருமணத்துக்குச் செல்ல வேண்டாம் எனச் சசிகலா, உறவுகளுக்குத் தடை போட்டதாகத் தகவல் பரப்பப்பட்டது. ஆனால், அவர் சிறையிலிருந்தபடியே வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.


அது, சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது. அதில் வாழ்த்து மட்டும் இல்லாமல் குடும்பம் தொடர்பான பல விஷயங்கள் எதிர் வரும் காலங்களில் எப்படிச் செயல்படுவது உள்ளிட்டவையும் எழுதப்பட்டிருந்ததால் கடிதத்தை வெளியே காண்பிக்கவில்லை.


திவாகரனுக்கு அமித ஷா அனுப்பிய கடிதம்


திவாகரன் டெல்லியில் தனக்கு உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி அ.தி.மு.க-வில் மாற்றங்களை ஏற்படுத்தி பிரிந்து கிடப்பவர்களை இணைக்கும் விதமான செயல்களைச் செய்து அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். அதன் மூலம் தன் மகன் ஜெயானந்துக்கும் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்க நினைக்கிறார்.


அவரை இளம் தலைவராக ஆக்க வேண்டும் என்பது திவாகரனின் விருப்பம். அதற்கான காலம் கனிந்துவிட்டதாகவே நினைக்கிறார். இதுவே அவர்களுடைய உற்சாகத்துக்குக் காரணம். இவையெல்லாம் செயலுக்கு வருமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றனர்.திவாகரனின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவே சசிகலா மத்தியில் அவரைப் பற்றித் தவறான தகவல்களைத் தினகரன் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அ.தி.மு.க தரப்பிலும் திவாகரன் எடுக்கும் மூவ்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே டெல்லி பி.ஜே.பி-யின் ஆலோசனைப்படி அ.தி.மு.க-வில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


அதே நேரத்தில் சசிகலாவிற்கு உள்ள பிரச்னைகள் அவர் குடும்பத்தில் நடக்கும் மோதல்கள் என அனைத்தும் முடிவிற்கு வரும் என விபரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)