சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்

.


 


தமிழகத்தில் 144 தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்களை வாங்கு வரும் பொது மக்கள் உரிய அடையாள அட்டையுடன் வர வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
 
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் 144 தடை உத்தரவு குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர்  சீதாலட்சுமி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.. பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்,  அப்போது பேசிய அவர், 


சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை செயல்பட்டாலும், பொது மக்கள் செல்ல அனுமதியில்லை... பெரிய, சிறிய  வியாபாரிகள் மட்டுமே அனுமதி என தெரிவித்துள்ளார்...சென்னை மாவட்டம் முழுவதும் மண்டல் வாரியாக கண்காணிக்கும் விதமாக 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது... 


சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தை பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு மற்றும் வங்கி ஆகிய அத்தியாவசிய ஐடி நிறுவனங்கள் மட்டும் முழுமையாக செயல்பட்டால்.மற்ற ஐடி நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்கள் மட்டுமே இயங்க வேண்டும், முடிந்த வரை வீட்டில் இருந்த படியே இயங்க வேண்டும் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்....


சென்னை மாநகராட்சிக்கு தன்னார்வலர்கள் தானாக முன்வந்து அரிசி உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் வழங்கி வருகின்றன... அடுத்த மூன்று நாட்களில் முழுமையான நிலவரம் தெரிய வரும்... 


சென்னை மாநகராட்சியில் உள்ள கிருமி நாசினி தெளிக்கும் தூய்மை பணியாளர்கள் 4000 பேர் உள்ளன.. அவர்களுக்கு புதிய பிரத்யேகமான பாதுகாப்பு  உடை வழங்கப்பட்டுள்ளது... சென்னை மாநகராட்சி அரசு காப்பகங்களில் சாலையோரத்தில் வசிப்பவர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர்... அவர்களுக்கான உணவு, இருப்பிடம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது...பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பேசுகையில், 
சென்னை மாநகரில் ஓ.எம்.ஆர்,  ஈ.சி.ஆர் பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 144 தடை உத்தரவு தீவீரப்படுத்தப்பட்டுள்ளது...


400க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்கள் மூலமாக காவலர்கள் பணியாற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்...


144 தடை உத்தரவு விடுமுறை தினம் இல்லை என்பதால் பொது மக்கள் வெளியில் செல்லாமல் காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


பேட்டி: பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர்...


பேட்டி: ஏ.கே விஸ்வநாதன், சென்னை காவல் ஆணையர்....


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)