கல்லூரி மாணவ மாணவியர் கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹேண்ட் சானிடைசர் தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.


நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரி மாணவ மாணவியர் கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹேண்ட் சானிடைசர் தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.


கொரானா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தமிழகத்தில் இதன் தாக்கம் குறைவு என்ற போதிலும் அடுத்து வரும் நாட்களில் கூடுதலாக பரவக்கூடும் என்ற எச்சரிக்கை அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களும் ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என சுகாதார அமைப்புகள் மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது.


இதனால் அதற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவிற்கு விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரி மாணவ மாணவியர் சானிடைசர்களை தயாரித்து இலவசமாக மக்களுக்கு வினியோகம் செய்ய முடிவு செய்தனர்.


அதன் அடிப்படையில் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி 80 சதவீதம் எத்தனால், 10% ஹைட்ரஜன் பெராக்சைடு 10% கிளிசரின் என்ற அடிப்படையில் கலந்து நாளொன்றுக்கு 500 லிட்டர் கரைசலை தயாரித்து 100 மில்லி லிட்டர் 50 மில்லி லிட்டர் பாட்டில்களில் அடைத்து இலவசமாக மக்கள் மத்தியில் வினியோகித்து வருகின்றனர்.


ஆசிரியர்கள் கோபிகிருஷ்ணா, காளிமுத்து ஆகியோரின் வழிகாட்டுதலில் நான்காம் ஆண்டு மாணவ மாணவியர் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,  கடைகளில் சானி டைசர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


அதனை தயாரித்து கிராமப்புறத்தில் சாதாரண மக்களுக்கு அளிக்க முடிவு செய்தோம். மூன்று நாட்களாக தினமும் 500 லிட்டர் கரைசல் எங்களது கல்லூரி ஆய்வகத்தில்  தயாரித்து பாட்டில்களில் அடைத்து வழங்கி வருகிறோம்.


கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, பணகுடி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இலவசமாக விநியோகித்து வருகிறோம். அடுத்த பத்து நாட்களுக்கு தொடர்ந்து தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோம்.  500 லிட்டர் சானிடைசர் தயாரிப்பது மற்றும் பாட்டில்கள் உள்ளிட்ட வகையில் 3 ஆயிரம் வரை செலவாகிறது என்று தெரிவித்தனர்.


கொரானா என்னும் கொடிய தொற்று பரவாமல் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் கல்லூரி மாணவ மாணவியரும் தங்களை இணைத்து கொண்டு சானிடைசர்  தயாரித்து வழங்குவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)