மாணவிக்கு வன்கொடுமை - சென்னையில் நடிகர் கைது...

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பழச்சாற்றில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திரைப்பட நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நடிகர் சூரியகாந்த். இவர் திரைப்பட நடிகராகவும், அதிமுகவில் தலைமை கழக நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். 


இவரது மகன் விஜய் ஹரிஷ். இவர், 'நாங்களும் நல்லவங்க தான்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றில் விஜய் ஹரிஷை வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் கைது செய்த


கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தப் புகாரில், விஜய் ஹரிஷ், தன்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டத்திற்கு அழைத்து சென்று, மாதுளம் பழ சாற்றில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.