போலி எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர்.

கோவையில், போலீஸ் போல் நடித்து மொபைல்போன், பணம் பறித்த போலி எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், சூரங்குடியை சேர்ந்தவர் பாண்டிகுமார் (31). நேற்று முன்தினம், கோவை, சரவணம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது அங்கு நின்றிருந்த போலீஸ் எஸ்.ஐ., ஒருவர் பாண்டிகுமாரை, தடுத்து நிறுத்தினார். வாகன ஓட்டுனர் உரிமங்களை கேட்டவர், பாண்டிகுமார் கஞ்சா கடத்தியதாக, வழக்கு பதிவு செய்ததாக மிரட்டி, 1,000 ரூபாயை பறித்தார்.


அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பாண்டிகுமார், சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.


வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். இந்நிலையில், சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எஸ்.ஐ., சீருடையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தார்.