திடீர் வேகம் எடுக்கும் எடப்பாடியார்.. திகைப்பில் திமுக.. கூடவே அதிர்ச்சியில் பாஜக.. அடுத்து என்னவோ.

சென்னை: செம பாஸ்ட்டாக காய் நகர்த்தி அரசியல் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சும்மா இடி மாதிரி திமுகவுக்கு மட்டுமல்ல..


பாஜக தரப்புக்கும் சேர்ந்து விழ ஆரம்பித்துள்ளது. முதல்வரை எடப்பாடியாரை பொறுத்தவரை சாந்தமானவர்.. மென்மையான போக்கை கையாள்பவர்.. யாரும் சாதாரணமாக சந்திக்ககூடியவர்..


முக்கியமாக எளிமையான முதல்வர் என்ற பெயரை எடுத்தவர்! ஆனால், ஆரம்பத்தில் இவர் தலைமையிலான அதிமுக அரசு கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.. ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக அமைச்சரவையை யாருமே பெரிதாக அங்கீகரிக்கவில்லை.. சொல்லபோனால்,


இவர்கள் என்னத்த செய்துவிட போகிறார்கள் என்ற எண்ணம்தான் மேலோங்கியது. இதெல்லாம் இப்போது தலைகீழ்.. மொத்தமாக மாறி விஸ்வரூபம் எடுத்துள்ளது அதிமுக.. பாஜகவின் நிழல், அடிமை அரசு என்ற வார்த்தையெல்லாம் இப்போது எடுபடாது.. பாயின்ட் பாயின்ட்டாக எடுத்து பேச ஆரம்பித்துவிட்டார் எடப்பாடியார்.


இதில் முதலாவதாக, திமுகவுக்கு செக் வைப்பது.. அவர்களது முக்கிய குற்றச்சாட்டே சிஏஏ விவகாரம்தான்.. முரளிதரராவை சந்திப்பதற்கு முன்பு... டெல்லியில் தமிழக அமைச்சர்களை சந்திதப்பதற்கு முன்பு ஒரு முக்கிய கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது. அதில், அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு தலைவர்களும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா உள்ளிட்டோருடன் முதல்வர் தனிப்பட்ட முறையில் சிஏஏ விஷயம் குறித்து விவாதித்துள்ளார்.


"இதை ஒன்றை மட்டுமே குற்றஞ்சாட்டி பெரும்பாலான இஸ்லாமிய பெருமக்களின் வாக்குகளை திமுக அள்ள பார்க்கிறது.. அதை விடக்கூடாது.. இது பாஜக கொண்டு வந்த சட்டம், அவர்களுக்காக பரிந்து பேச போய் நாம் ஏன் மக்களின் வாக்கு வங்கியை இழக்க வேண்டும்? சிஏஏ வைத்து பாஜக அரசியல் செய்கிறது, திமுக அரசியில் செய்கிறது, நாம் ஏன் செய்யக்கூடாது? எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்று இஸ்லாமிய பெருமக்களின் வாக்குகளை 40 சதவீதம் அள்ள வேண்டும்" என்றுதான் பேசி முடிவெடுத்துள்ளனர்.


இதுதான் அதிமுகவின் முதல் சரவெடி! இரண்டாவதாக, தமிழகம் முழுவதும் முதல்வரும் - துணை முதல்வரும் சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுத்துள்ளனராம்.. காரணம் கட்சிக்குள் தலைதூக்கி இருப்பது ஒற்றை தலைமை விவகாரமும், முதல்வர் வேட்பாளர் யார் என்ற சிக்கலும்தான் பெரிய பிரச்சனையாக வெடித்து வருகிறது..


இதன் உச்சம்தான் திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் வெடித்து வருவது.. அதனால்தான் இருவரும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது, பல அதிரடிகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். ஏனெனில் உள்ளாட்சி தேர்தலேயே பணப்பட்டுவாடா சரியாக நடக்காததுதான் காரணம் என்றும், தேர்தல் சமயத்தில் சில அமைச்சர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை, என்றும் மாவட்ட செயலாளர்கள் புலம்பி இருந்தனர்..


அநேகமாக இந்த விவகாரங்களில் ஓபிஎஸ்- இபிஎஸ் தலையிட்டு களையெடுப்பு நடக்கும் என தெரிகிறது. மூன்றாவதாக, ராஜ்ய சபா சீட்டு விவகாரத்தில் இஸ்லாமியர் ஒருவருரை வேட்பாளராக அறிவிக்கவும் யோசனை நடக்கிறது.. சிஏஏ அதிருப்தியில் இருந்து தப்புவதற்காக மட்டுமல்ல.. வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்தும் இதைதான் யோசித்து வருகிறது.


சென்றமுறை வேலூர் தேர்தலின்போது திடீரென முகமதுஜானை அறிவித்தது அதிமுகவுக்கு பெரிய பலமாக அப்போது இருந்தது.. அந்த சமயத்தில்தான் காஷ்மீர் விவகாரம், முத்தலாக் விவகாரம் தலைதூக்கி இருந்தது.. மாநிலங்களவை வேட்பாளராக முகமதுஜானை அறிவித்து வெற்றியை நூலிழையில் பெற்றது அதிமுக.. இப்போதும் அப்படி பிளானைதான் எடப்பாடியார் வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.


எடப்பாடியாரின் இந்த அதிரடிகள் ஒவ்வொன்றும் திமுகவுக்கான பதிலடியாக நேரடியாக தோன்றினாலும், மறைமுகமாக இதில் பாஜகவுக்கான எதிர்ப்புமாக பிரதிபலிக்கிறது.. ஆக.. திமுக - பாஜக இரு கட்சிகளுமே அதிமுகவை கண்டு லேசான நடுக்கத்திலும் கலக்கத்திலும் உள்ளதாகவே சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு