ரஜினிசார் உங்க பிரஸ் மீட்லேயே உங்க ஆளுங்க ஊழல் பண்ணிட்டாங்களாம்

சென்னை எம்.ஆர்.சி நகர் லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று பத்திரிகையாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். இச்சந்திப்பில் 2021-ல் திமுக, அதிமுகவை வீழ்த்துவேன் என அறிவித்தார் ரஜினிகாந்த். இப்பவும் சொல்றேன்...  • மலையை தூக்க நான் ரெடி..

  • தலைசுற்ற வைத்த ரஜினி பிரஸ் மீட்

  • இதற்காக கொள்கை திட்டங்கள் என சிலவற்றையும் ரஜினிகாந்த் வெளியிட்டார்.


ஆனால் வழக்கம் போல ரஜினிகாந்தின் இந்த சந்திப்பு பலருக்கும் தலைசுற்ற வைக்கும் வகையில் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியாமல் இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க ரஜினிகாந்தின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சைகளும் உருவாகி உள்ளது.


ரஜினிகாந்தின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு எந்த ஒரு சினிமா பத்திரிகையாளர்களையும் அழைக்கவே இல்லையாம் ரஜினிகாந்த். உங்களை ஏற்றி வைத்த ஏணி.. எங்களையே உதைச்சுட்டீங்களே ரஜினி என கொந்தளிக்கின்றனர் சினிமா பத்திரிகையாளர்கள்.


இதே செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு ஊழலும் நடந்துள்ளதாம். இணைய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்த ரஜினி தரப்பு ஏற்பாட்டாளர்கள்' சில இணைய ஊடகங்களுக்கு மட்டும் பெரும் தொகை பணம் பெற்றுக் கொண்டு அனுமதித்திருக்கின்றனராம்.


அவர்கள் பெறும் பணம் ரஜினிகாந்துக்கு செல்லப் போவது இல்லை.. 'ஏற்பாட்டாளர்கள்' ஏப்பம் விடத்தான் போகிறார்கள்.


அதாவது ஊழலை ஒழிக்கப் புறப்படுவதாக ரஜினிகாந்த் அறிவித்த செய்தியாளர்கள் சந்திப்பையே ஊழல், முறைகேடு, லஞ்சம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பை அவரது அணுக்கர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.


இதில் கட்சி தலைமை- ஆட்சி தலைமை- நல்லாட்சி என பொங்கினால் எப்படி? - என்பதுதான் வைரலாகும் செய்தியின் சாராம்சம்.- ரஜினிசார் உங்க பிரஸ் மீட்லேயே உங்க ஆளுங்க ஊழல் பண்ணிட்டாங்களாம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு