முழுக் கட்டணம் திரும்பப் பெறலாம்... விதிமுறை தளர்வு

கொரோணா வைரஸ் பரவல் எதிரொலியாக ரயில் பயணச் சீட்டுகளின் பயணக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. 


மார்ச் 21 முதல் ஏப்ரல் 15 வரையிலான காலக்கட்டத்தில் பயணம் செய்யச் டிக்கெட் எடுத்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் ரயிலை ரத்து செய்தால், பயணச்சீட்டைப் பயணத் தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் கொடுத்துக் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.


ரயில் ரத்து செய்யப்படாமல், பயணிகள் பயணம் செய்ய விரும்பாவிட்டால், பயணத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டைக் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.


இந்த ரசீதைப் பெற்ற 60 நாட்களுக்குள் கோட்ட வணிக மேலாளருக்கு அனுப்பிவைத்துப் பயணக்கட்டணத்தைத் திரும்பப் பெறலாம். பயணத்தைத் தொலைபேசியில் ரத்து செய்தவர்கள், பயணத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.