செய்தியாளர்களை மட்டும் கொரோனா கிருமி தொற்றிக் கொள்ளாதா..

தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுகள் அனைத்து  சிறப்பாக உள்ளது


அதற்கு அனைத்து செய்தியாளர்கள் சார்பாக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்


அரசின் இந்த நடவடிக்கை அத்தனையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும்,மக்களின் அச்சத்தை போக்குவதும், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும் செய்தியாளர்கள் தான்


அத்தகைய செய்தியாளர்களின் நிலை மிக மோசம், எங்கள் நிலையை கொஞ்சம் கருணை கூர்ந்து கவனியுங்கள்


தற்போது சுமார் 300 செய்தியாளர்கள் வந்து செல்லும் இடமாக தலைமைச்செயலக செய்தியாளர்கள் அறை உள்ளது


சட்டமன்ற நிகழ்வு இப்போது நடைபெறுவதால் இந்த எண்ணிக்கை அதிகம்


ஒரே ஒரு டாய்லட்,இரு வாஷ்பேசின் தான் இவ்வறையில் உள்ளது


அனைவரும் உணவருந்துவதும் இங்குதான்


கடுமையான இட நெருக்கடி


2018 - ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பல சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச்செயலக செய்தியாளர் அறை இட நெருக்கடி குறித்து பேசிய பொழுது:


சட்டபேரவை தலைவருடன் கலந்து பேசி கூடுதலாக ஒரு அறை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என செய்தித்துறை அமைச்சர் பேரவையில் தெரிவித்தார்.


அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை


கொரோனோ போன்ற தொற்று நோய்கள் படையெடுக்கும் இந்நேரத்தில் 30 பேர் அமரக்கூடிய அறையில் 100 முதல் 300  நபர்களுக்கு மேல் ஒரே அறையில்  கூடியிருப்பது எவ்வளவு ஆபத்தானது என அரசு உணர்ந்து..


செய்தியாளர்களுக்கு கூடுதலாக ஓர் அறை ஒதுக்கித் தரும்படி  கேட்டுக் கொள்கிறோம்.


தற்போது,உடனடியாக தலைமைச்செயலகசெய்தியாளர் அறையில் கொரோனா தொற்று தடுப்புக்கான சானடைசர் போன்றவை வழங்கப்பட வேண்டும்,


செய்தியாளர்கள் அனைவருக்கும் "மாஸ்க்" வழங்கப்பட வேண்டும்


சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு செய்தியாளர் அறையை தினசரி கண்காணிக்க பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.


நாங்கள் பணிபுரிவது.. எங்களுக்காகவும்.. உங்களுக்காகவும் தான்.


📰காகிதம் ராஜன்-நன்றி


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு