ரஜினி மக்கள் மன்றத்தின் உதவியால் புதுப்பொலிவு பெற்ற நெல்லை மாநகராட்சி பள்ளி
ரஜினி மக்கள் மன்றத்தினரின் உதவியால், திருநெல்வேலி குறிச்சி பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை குறைந்து வரும் சூழலில், அப்பள்ளிகளில் தனியார்பங்களிப்புடன் புனரமைப்பு பணிகளை செய்து, மாணவர்களை ஈர்க்கமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் குறிச்சியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. 1936-ல் தோற்றுவிக்கப்பட்ட இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 70 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்