இந்தியா கொரோனாவுக்கு எதிரான யுத்தம் -விரைவில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் உள்கட்டமைப்பு, மருத்துவ வசதிகளை மேம்படுத்த விரைவில் மத்திய அரசு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவை வேரோடு அழிக்க 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடித்து வரும் 130 கோடி இந்திய மக்களின் மருத்துவ, பொருளாதார தேவைகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்குவது குறித்து பல்வேறு வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறது.
பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம் ,ரிசர்வ் வங்கி உள்ளிட்டவையும் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றன. இதையடுத்து ஒன்றரை லட்சம் கோடி முதல் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வரை மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் ஒருவாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 10 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் நிதியுதவி செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.